tamilnadu

img

தொடர்ந்து நான்காவது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு

விமான எரிபொருளைவிட 33% அதிகம்

புதுதில்லி, செப்.17- பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து நான்காவது நாளாக ஞாயி றன்றும் 35 பைசா உயர்த்தப்பட்டது.  விமான டர்பைன் எரிபொருள் (ஏடிஎஃப்) விலையை விட 33 சதவீதம் அதிகம். பெட்ரோல் விலை 16-ஆவது முறையாகவும் டீசல் விலை 19-ஆவது  முறையாகவும் விலை உயர்த்தப் பட்டுள்ளது பெட்ரோல், டீசல் விலை நிர்ணயத்தை தனியாருக்கு தாரை வார்த்துவிட்ட ஒன்றிய அரசு ஏழை-எளிய-நடுத்தர மக்களிடமிருந்து கடந்த ஆறு ஆண்டுகளில் 300 சத வீதத்திற்கும் அதிகமான வருவாயை ஈட்டியுள்ளது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து நான்காவது நாளாக ஞாயிறன்றும் 35 பைசா உயர்த்தப் பட்டது. இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் பயன்படுத்தப்படும் பெட்ரோல் இப்போது விமான டர்பைன் எரிபொருள் (ஏடிஎஃப்) விலை யை விட 33 சதவீதம் அதிகம். தில்லியில் (ஏடிஎஃப்) விமானங்களுக்கான எரிபொருள் விலை கிலோ லிட்டர் ரூ.79,020.16 அல்லது லிட்டருக்கு ரூ.79.ஆனால் வாகனங்களுக்கான பெட்ரோல் லிட்டர் ரூ.110க்கும் மேல் சென்றுவிட்டது.

பெட்ரோல் மற்றும் டீசலுக்கான கலால் வரியை  ஒன்றிய அரசு கடந்த  ஆறு ஆண்டுகளில் இரண்டு முறை  உயர்த்தியது. இதனால் வருவாய் 300 சதவீதத்திற்கு மேல் அதிகரித்துள்ளது. ஒன்றிய  மோடி அரசு 2014-15-ஆம்  ஆண்டு பெட்ரோல் மீதான கலால் வரி யிலிருந்து, 29,279 கோடியையும், டீசல்  மீதான கலால் வரியிலிருந்து ரூ. 42,881 கோடியையும் வசூலித்துள்ளது. 2014- ஆம் ஆண்டு பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.  9.48 லிருந்து. 32.90 ஆகவும்.  டீசல்  மீதான விலை லிட்டருக்கு ரூ.3.56  லிருந்து. ரூ. 31.80 ஆகஉயர்ந்துள்ளது. நடப்பு நிதியாண்டின் (2020-21) முதல் பத்து மாதங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி வசூல் ரூ.2.94 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.  2014-2015-ஆம் ஆண்டில் இயற்கை எரிவாயு மீதான கலால் வரியாக ஒன்றிய அரசு ரூ. 74,158 கோடிவசூலித்தது, இது ஏப்ரல் 2020 முதல் ஜனவரி 2021 வரை ரூ.2.95 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

மொத்த வருவாயில் பெட்ரோல், டீசல் மற்றும் இயற்கை எரிவாயு மீது வசூலிக்கப்படும் வரி 2014-15-ஆம் ஆண்டு 5.4 சதவீதமாக இருந்தது. இந்த நிதியாண்டில் இது 12.2 சதவீத மாக உயர்ந்துள்ளது. நாட்டின் பெரும்பாலான பகுதி களில் பெட்ரோல் விலை ஏற்கனவே ரூ.100-ஐ தாண்டிவிட்டது. ஒரு லிட்டர்  டீசல்விலை  மத்தியப் பிரதேசம்,இராஜஸ்தான், ஒடிசா, ஆந்திரா, தெலுங்கானா, குஜராத், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், பீகார், கேரளா, கர்நாடகா, லடாக், பனாஜியில்,  ரூ.99.56 ஆகவும், பெங்களூரில் ரூ99.97 ஆகவும் உள்ளது. இராஜஸ்தானின் எல்லை நகர மான கங்காநகரில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 117.86 க்கும், டீசல் ரூ.105.95 க்கும் விற்கப்படுகிறது.

தில்லியில் பெட்ரோலின் விலை லிட்டருக்கு அதிகபட்சமாக ரூ.105.49 ஆகவும், மும்பையில் லிட்டருக்கு ரூ.111.43 ஆகவும் உயர்ந்தது. மும்பையில் ஒரு லிட்டர் டீசல் ரூ.102.15-க்கு விற்கப்படுகிறது; தில்லியில் ​இதன் விலை. 94.22 ஆக உள்ளது. ஒன்றிய, மாநில அரசுகளின் வரிகளைக்  கழித்தால் பெட்ரோல் ஒரு  லிட்டர் 66ஆகவும், டீசல் 55 ரூபாயாகவும் இருக்கும். ஆனால், 2014-ஆம் ஆண்டு  இருந்ததைவிட கச்சா எண்ணெய் விலை தற்போது குறைவாக உள்ள நிலை யிலும், பெட்ரோல் ரூ.102-ஐ தாண்டிவிட்டது, டீசல் ரூ.100-ஐ நெருங்கிக்கொண்டிருக்கிறது. ஒன்றிய, மாநில அரசுகளின் வரிகளைக் கழித்தால் பெட்ரோல் ஒரு லிட்டர் 66ஆகவும், டீசல் 55  ரூபாயாகவும் இருக்கும். ஆனால்,  2014ல் இருந்ததைவிட கச்சா எண்ணெய் விலை தற்போது குறைவாக நீடிக்கும் நிலை யிலும், பெட்ரோல் 102 ரூபாயை தாண்டியும்,  டீசல் 100 ரூபாய்கு நெருக்கமாகவும் விற்கப்படுகிறது. 2014ஆம் ஆண்டு ஒரு லிட்டர் பெட்ரோல்  ரூ.74க்கு விற்றபோது ஒன்றிய அரசின் வரி ரூ.10, மாநில அரசின் வரி ரூ.12  டீலர் கமிஷன் ரூ.2 என்ற விகிதத்தில் இருந்தது. பெட்ரோல் விலை ரூ.49 ரூபாய். 

இப்போது வரிகளுக்கு முன் கச்சா எண்ணெய் விலை அடிப்படையில் பெட்ரோல் அசல் விலை ரூ.42 ஆக, அதாவது ரூ.7 குறைவாக உள்ள நிலையில், ஒன்றிய அரசின் வரி ரூ.33, மாநில  அரசின் வரி ரூ.24 ஆகவும் இருக்கிறது. டீலர் கமிஷன் ரூ.4 ரூபாய் சேர்த்து ஒரு  லிட்டர் பெட்ரோல் 102ஐ தாண்டி விற்பனையாகிறது. தமிழ்நாட்டில் 34 மாவட்டங்களில் ரூ.102-ஐ தாண்டியுள்ளது. இதே நிலைதான், டீசலிலும்  2014-ஆம் ஆண்டு கச்சா எண்ணெய் விலை அடிப்படையில் ஒரு லிட்டர் டீசல் ரூ.45 ஆக  இருந்த நிலையில், ஒன்றிய அரசு வரி ரூ.5,  மாநில அரசு வரி ரூ.7, டீலர் கமிஷன் ரூ.1 சேர்த்து 58 ரூபாயாக ஆக இருந்தது.  தற்போது டீசலின் அடிப்படை விலை ரூ.43 ஆக அதாவது 2 ரூபாய் குறைவாக இருந்தும் மத்திய அரசு வரி ரூ.32,  மாநில  அரசு வரி ரூ.13  டீலர் கமிஷன் 3 ரூபாய் சேர்ந்து 100-ஐ நெருங்கி விற்கப்படுகிறது. ஒன்றிய, மாநில அரசுகளின் வரிகள் குறைக்கப்பட்டால், தற்போதும் ஒரு லிட்டர் பெட்ரோல் 66 ரூபாயாகவும் டீசல் 55 ரூபாயாகவும் இருக்க வாய்ப்புள்ளது.

;