tamilnadu

img

பி.ஆர்.நடராஜன் எம்.பி., தொடர் முயற்சி வெற்றி : கோவையில் சிஜிஎஸ்எச்எஸ் மருத்துவமனை திறப்பு

கோயம்புத்தூர், மார்ச் 23- ஒன்றிய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் பயன்பெரும்  வகை யிலான சிஜிஎஸ்எச்எஸ் மருத்துவமனை கோவையில் திறப்பு விழா  செய்யப் பட்டது. கோவை நாடாளுமன்ற உறுப்பி னர் பி.ஆர்.நடராஜன் தொடர் முயற்சிக்கு பலனாக இந்த மருத்துவமனை கோவையில் அமையப் பெற்றுள்ளது. இம்மருத்துவமனையில் தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களான கோவை, நீலகிரி, பொள்ளாச்சி, திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல் மற்றும் கேரள மாநி லம் பாலக்காடு மாவட்டங்களை சேர்ந்த ராணுவத்தினர், ஒன்றிய அரசின் ஊழி யர்கள், ஓய்வூதியர்கள் மற்றும் குடும்பத்தி னர் பயனடைவர்.  ராணுவத்தினர், ஒன்றிய அரசு  ஊழியர்கள், மத்திய அரசின் ஓய்வூதி யர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் முன்னாள், இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் தங்களது பங்களிப்பை செலுத்தி இலவசமாக சிகிச்சை பெறுவதற்கு சிஜிஎச்எஸ் (சென்ட்ரல் கவர்மென்ட் ஹெல்த் ஸ்கீம்) மருத்துவமனைகள் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் உள்ளன. இந்த மருத்துவமனை தமிழ்நாட்டில் சென்னையில் மட்டுமே உள்ளது.  சிஜிஎச்எஸ் மருத்துவ மையத்தின் கிளையை தமிழகத்தின் மேற்கு மாவட்டங் களை மையப்படுத்தி  கோவையில் துவக்க வேண்டும். இதற்கான நிதியை ஒன்றிய அரசு ஒதுக்க வேண்டும் என 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வலியுறுத்தி னார். மேலும், இதுகுறித்து தொடர்ந்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் இத்துறை சார்ந்த ஒன்றிய அரசு அதிகாரிகளை சந்தித்து வலியுறுத்தி வந்தார். 

இதன்தொடர்ச்சியாக, சிஜிஎச்எஸ் அமைத்திட வலியுறுத்தி கோவை, நீலகிரி,  பொள்ளாச்சி, திருப்பூர், ஈரோடு, கரூர்,  திண்டுக்கல், பாலக்காடு ஆகிய எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கையெழுத்தைப் பெற்று மத்திய சுகா தாரத்துறை அமைச்சர் ஹர்சவர்த்த னுக்கு மீண்டும் நினைவூட்டல் கடிதம் எழுதி வலியுறுத்தினார். இதனையடுத்து, ஒன்றிய சுகாதாரத்துறை கோயமுத்தூர் உள்ளிட்டு நாடு முழுவதும் 16 இடங்களில் சிஜிஎச்எஸ் மருத்துவ மையங்களை அமைக்க கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ஒப்புதலை வழங்கியது. இதன் தொடர்ச்சியாக இதற்கான கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு நிறை வடைந்த நிலையில், புதனன்று இதன் திறப்புவிழா நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. கோவை மாவட்ட ஆட்சியர் அலுவல கம் அருகே உள்ள பிஎஸ்என்எல் அலு வலக வளாகத்தில், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் சிஜிஎச்எஸ் Central Government Health Scheme -CGHS) நல மையம் திறப்பு விழா நடைபெற்றது. மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா காணொளி காட்சி மூலமாக மையத்தி னை திறந்து வைத்தார்.

கோவை நாடா ளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் முறைப்படி மருத்துவ மையத்தினை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து உரை யாற்றினார்.  இந்நிகழ்வில் பங்கேற்று பி.ஆர்.நடராஜன் எம்பி.,பேசுகையில், கோயம் புத்தூரை மையப்படுத்தி இந்த மையத்தி னை வழங்கிய ஒன்றிய அரசுக்கு நன்றி யை தெரிவித்துக்கொள்கிறேன். அதே நேரத்தில், ஆயுர்வேதம் மற்றும் யுனானி சிகிச்சைகளை அளிக்கும் வகையிலான மருத்துவ மையங்களையும் கோவைக்கு  வழங்க வேண்டும். இதற்கான தொடர் முயற்சியை மேற்கொள்வேன். உட னடியாக செயல்பாட்டிற்கு வரும் இம்மருத்துவமனைக்கு எந்த விதமான உதவிகளையும் ஒன்றிய அரசிடம் பெற்றுத் தருவேன், இதற்கான கோரிக்கைகளோடு தொடர்ந்து தன்னை அணுகலாம் என்றார்.  இந்நிகழ்வில் ஒன்றிய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் திரளானோர் பங்கேற்றனர்.

;