tamilnadu

img

தோழர் கே.ஏ.தேவராஜனுக்கு செவ்வணக்கம்

தமிழக ஆசிரியர் இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் முதுபெரும் தலைவருமான தோழர் கே.ஏ.தேவராஜன் மதுரையில் காலமானார். அவரது உடலுக்கு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலத் தலைவர் மணிமேகலை தலைமையில் துணை பொதுச் செயலாளர் கணேசன்,  மாநிலப் பொருளாளர் மாத்தேயு, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில பொதுச் செயலாளர் ஆ.செல்வம், ஆசிரியர் கூட்டணியின் முன்னாள் மாநில நிர்வாகிகள் மோசஸ், கண்ணன், ஜீவா, பாலசந்தர், மாநில துணைத் தலைவர் ஆரோக்கியராஜ், மாநிலச் செயலாளர் முருகன், மதுரை  மாவட்டச் செயலாளர் சீனிவாசன் மற்றும் தமிழ்நாடு ஓய்வுபெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச் சங்க  மாநிலத் தலைவர் முரளிதரன், பொதுச் செயலாளர் பிரபாகரன் மற்றும் பலர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.

;