திருநெல்வேலி, ஜூன் 23- நெல்லையில் அமைக்கப்பட்டுள்ள அரசு பொருட்காட்சி யை அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார். நெல்லை டவுன் பொருட்காட்சி திடலில் அரசு பொருட் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா சனி யன்று மாலை நடைபெற்றது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி யினர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி தலைமை தாங்கி னார். நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு பொருட்காட்சியை திறந்து வைத்தார். அப்போது அவர் கூறியதாவது: நெல்லை மாவட்டத் துக்கு அ.தி.மு.க. ஆட்சி காலத்தில்தான் அதிகமான திட்டங்கள் கிடைத்து உள்ளது. தமிழக அரசு மூலம் குடிநீர் பிரச்சனை யை தீர்க்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம். அதே நேரத்தில், மன்னர்கள் காலத்தில் இறை வனிடம் முறையிட்டது போல், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவுப்படி கோவில்களில் மழை வேண்டி யாகம் நடத்தி உள்ளோம்.நெ.ல்லை அரசு பொருட்காட்சியில் அரசு துறைகள் சார்பில் 32 அரங்குகள், கடைகள் மற்றும் பொழுது போக்கு ராட்டினங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. 45 நாட்கள் பொருட்காட்சி நடைபெறுகிறது. பொது மக்கள் இந்த அரங்குகளை பார்த்து அரசின் சாதனைகளையும், திட்டங்களையும் தெரிந்து கொண்டு பயன் அடையுமாறு கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் பேசினார் தொடர்ந்து விழாவில் 754 பயனாளிகளுக்குரூ.2.56 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி யில் எம்.பி.க்கள் முத்துக்கருப்பன், விஜிலா சத்யானந்த், எம்.எல்.ஏ.க்கள் முருகையா பாண்டியன், இன்பதுரை, செல்வமோகன்தாஸ் பாண்டியன், மனோகரன், உள்பட பலர் கலந்து கொண்டனர் செய்தி விளம்பரத்துறை இயக்கு னர் பி.சங்கர் நன்றி கூறினார்.