நாமக்கல், ஜூலை 16- நாமக்கல் மாவட்டத்தில் சேர்க்கப்பட்ட 259 தீக்கதிர் சந்தா விற்கான தொகை ரூ.3 லட்சத்து 85 ஆயிரத்து 500ஐ, தீக்கதிர் முதன்மை பொது மேலாளர் என். பாண்டியிடம், மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்கள் ஒப்படைத்தனர். பள்ளிபாளையம் காவேரி ஆர்.எஸ். சிஐடியு அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், தீக்க திர் ஆண்டு சந்தா 141, ஆறு மாத சந்தா 94, தினசரி சந்தா 24 என மொத்தம் 259 சந்தாவிற்கான தொகை ரூ.3 லட்சத்து 85 ஆயிரத்து 500 வழங்கப்பட்டது. அப்போது, சில தோழர்கள் தங்கள் வீட்டில் உண்டியலில் சேகரித்து வைத்த காசுகளை, தீக்கதிர் நாளிதழ் சந்தா தொகையாக செலுத்தியது உணர்வுப்பூர்வமாக இருந்தது. இந்நிகழ்வில் சிபிஎம் மாவட்ட செயலாளர் எஸ்.கந்தசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கள் ஏ.ரங்கசாமி, பி.பெருமாள், எம்.அசோகன், கே.தங்கமணி, எஸ்.தமிழ்மணி, எஸ்.சுரேஷ், இடைக்கமிட்டி செயலாளர்கள் என். சக்திவேல், கே.சண்முகம், கோ. செல்வராசு, கே.சின்னசாமி, கே.எஸ்.வெங்கடாஜலம், ஆர்.மனோகரன், ஐ.ராயப்பன், ஆர்.ரவி, ஆர்.சந்திரமதி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் சி.துரைசாமி, கே.மோகன் உள்ளிட்ட ஏராளமா னோர் கலந்துகொண்டனர்.