tamilnadu

img

ரயில் மோதி 3 யானைகள் பலி: வனத்துறையினர் தீவிர விசாரணை

கோவை, நவ. 27- கோவையில் ரயில் மோதி உயிரி ழந்த 3 யானைகளின் உடல்களை பிரேத பரிசோதனை செய்து காப்புக்காடு பகுதி யில் அடக்கம் செய்ய வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்ற னர். இதனிடையே விதிமுறைகள் மீறி ரயில் அதிவேகத்தில் இயக்கப்பட்டதா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட வன அலுவலர் தெரிவித்துள்ளார். கோவை அடுத்த நவக்கரை அருகே யுள்ள மாவுத்தம்பதி கிராமத்திற்கு அருகே மரத்தோட்டம் பகுதியில் கோவை, பாலக் காடு இடையேயான ரயில்வே தண்ட வாளத்தின் ஏ பிரிவு உள்ளது. இந்த தண்ட வாளத்தில் வெள்ளியன்று இரவு மங்க ளூர் - சென்னை அதிவேக ரயில் கடந்த போது, தண்டவாளத்தை கடக்க முயன்ற 3 யானைகள் மீது அதிவேகத்தில் மோதி யது. இதில் 2 யானைகள் தூக்கி வீசப் பட்டதோடு, ஒரு யானை சுமார் 100 மீட்டர் வரை இழுத்து செல்லப்பட்டது. இவ் வபத்தில் 3 யானைகளும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத் திற்கு வந்த வனத்துறையினர், யானை யின் உடல்களை அப்புறப்படுத்தி, பிரேத பரிசோதனை மேற்கொண்டு வருகின்ற னர். இதில், உயிரிழந்தவை 25 மற்றும் 8 வயதுடைய 2 பெண் யானைகள் என்பதும், ஒரு தந்தம் இல்லாத 12 வயது ஆண் யானை மக்னா வகை என்பதும் தெரியவந்தது. 

இதையடுத்து யானைகளின் உடல்களை ஜேசிபி இயந்திரங்கள் மூலம் அப்புறப்படுத்திய வனத்துறை யினர், ரயில் எஞ்சினை விசாரணைக்காக போத்தனூர் ரயில் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். மேலும், ரயில் ஓட்டுநர் சுபையர் மற்றும் துணை ஓட்டு நர் அகில் ஆகிய இருவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். யானை களின் உடல்களை உடற்கூறாய்வு செய்வதற்கான பணிகளை பார்வையிட்ட மாவட்ட வன அலுவலர் அஷோக்குமார், வழக்கமாக பி லைன் வழியாக ரயில்கள் செல்லும் நிலையில், ஏன் இரவு வேளை யில் ஏ லைன் இருப்பு பாதையில் மாற்றப்பட்டது என்பது குறித்து விசாரித்து வருவதாகவும், விசாரணைக்கு பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். அடர் வனப்பகுதிக்கு அரு கிலிருக்கும் பி லைன் இருப்பு பாதை அருகே யானைகள் நடமாட்டம் அதிகமாக இருந்த நிலையில், ஏ லைன் இருப்பு பாதை அருகே யானைகள் ஏன் வந்தன என்பது குறித்தும் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் கூறிய அவர், உயிரிழந்த 25 வயது மதிக்கத்தக்க பெண் யானை கர்ப்பமாக இருந்ததா என்பது பிரேத பரி சோதனையில் தான் தெரியவரும் என தெரிவித்தார்.

நூறாண்டுக்கும் மேலாக இந்த ரயில் பாதை பயன்பாட்டில் இருந்தாலும், கடந்த 1978ஆம் ஆண்டு முதல் முறை யாக யானை ஒன்று ரயிலில் அடிபட்டு இறந்தது. அதைத்தொடர்ந்து இந்தப் பாதையில் மட்டும் கடந்த 1978 முதல் 2021 வரை 28 யானைகள் ரயில் மோதி உயிரிழந்துள்ளன. கடந்த 2008ஆம் ஆண்டு இதே பாதையில் மதுக்கரை அருகே யானை கூட்டம் ஒன்றின் மீது ரயில் மோதியதில், ஒரு கர்ப்பிணி யானை உட்பட 3 யானைகள் உயிரிழந்தன. இதே போல் கடந்த 2016ஆம் ஆண்டு இதே மங்களூர் சென்னை ரயில் மோதிய தில் ஆண் யானை ஒன்று உயிரிழந்தது. கடந்த 2016ஆம் ஆண்டு யானை ஒன்று ரயில் மோதி உயிரிழந்ததை அடுத்து, இரு மாநில வனத்துறையினரும் ரயில்வே துறையினருடன் கலந்தாலோசித்து, இந்தப்பாதையில் ரயில்களை 30 முதல் 40 கிலோமீட்டர்கள் வேகத்திற்குள் இயக்குவது என விதிமுறை வகுத்தனர். இருப்பினும் தொடரும் யானை மர ணங்கள் வன உயிரின ஆர்வலர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அதே சமயம் யானை உயிரிழந்த பகுதியைச் சேர்ந்தவர்கள், யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதோடு, அவை பயிர்களை சேதப்படுத்துவதும் அதி கரித்து வருவதால், கண்காணிப்பு கோபு ரம் ஒன்றை அமைத்து, வனத்துறை யினர் 24 மணி நேரம் தொடர் கண்கா ணிப்பில் ஈடுபட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ஆனால் யானைகள் நடமாட்டம் தெரிந்தால், ரயில் ஓட்டுநர்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கும் நடைமுறை இருப்பதால், கண்காணிப்பு கோபுரம் அமைக்க தேவையில்லை என மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. தற்போது இந்த விபத்து காரணமாக மீண்டும் கண்காணிப்பு கோபுரம், கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து கண்காணிக்க வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் எழுந்துள்ளது.

யானைகள் உயிரிழப்புகள் குறித்த  விசாரணை அறிக்கை என்னவானது? - பி.ஆர்.நடராஜன் எம்.பி., கேள்வி

கோவை நாடா ளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது: நவக்கரையில் ரயில் மோதி மூன்று யானைகள் உயிரி ழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யது. இந்த பகுதியில் யானைகள் இருப்பு பாதையை கடந்து செல்கையில் உயிர்ப் பலியாவது தொடர்ந்து வருகிறது.  குறிப்பிட்ட இந்த இடத்தில் மட் டும் இது மூன்றாவது விபத்து என்பது கவ லையளிக்கிறது. இப்பகுதியில் குறிப்பிட்ட தூரத்தை 30 கிலோ மீட்டருக்கு குறைவான வேகத்தில்தான் ரயில்கள் கடக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளது. ரயில்வே நிர் வாகம் இதனை கண்காணிக்கிறதா, இந்த நடைமுறைகளை மீறும்போது நடவ டிக்கை எடுக்கப்படுகின்றதா என்கிற கேள்வி எழுகிறது.

மேலும் இத்தனை வரு டங்கள் இதுபோன்ற விபத்துகள் நடக்கா மல் சமீப காலங்களில் மட்டும் ஏன் இப்படி யானைகள் இருப்புப் பாதைகளை கடக்கி றது என்பதையும் ஆய்வு செய்ய வேண்டி யுள்ளது. யானைகளின் வலசை பாதைகளை மறித்து கட்டிடங்கள், நிறுவனங்கள் கட்டப் பட்டது குறித்து வனத்துறையினர் ஆய்வு செய்ய வேண்டும். அப்படியான விதி மீறல்களை உடனடியாக பாரபட்சமில்லா மல் இதன் மீது நடவடிக்கை எடுத்து விதி மீறல் கட்டிடங்களை அகற்ற வேண்டும். மேலும் கோவை மாவட்டத்தில் யானைகள் தொடர் உயிரிழப்பு குறித்து வனத்துறை யினர் ஒரு குழுவை அமைத்து ஆய்வு செய்வதாக தெரிவிக்கப்பட்டது. இந்த ஆய் வில் என்ன தெரியவந்தது. அந்த ஆய்வு அறிக்கையின் முடிவு என்ன என்பதை மக்க ளுக்கு தெரியப்படுத்த வேண்டும். இனி இது போன்ற விபத்துகள் ஏற்படாமல் தடுக்க ரயில்வே நிர்வாகமும், வனத்துறையும் இணைந்து கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

 

;