tamilnadu

img

மதுரை தோப்பூரில் 500 படுக்கைகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையம்....

திருப்பரங்குன்றம்:
திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள தோப்பூரில் 500 ஆக்சிஜன் படுக்கை வசதி கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின்  வெள்ளியன்று திறந்து வைத்தார்.

மதுரை மாவட்டத்தில் கொரோனா பரவலைத் தடுக்க, தமிழக அரசு வழிகாட்டுதலின்படி, மாவட்ட நிர்வாகம் பல்வேறுநடவடிக்கையை மேற்கொண்டுள் ளது. பாதிக்கப்படுவோருக்கான ஆக்சிஜன் படுக்கை வசதி பற்றாக்குறையை போக்கவும், பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. குறிப்பாக அமைச்சர்கள் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், பெ.மூர்த்தி, மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆகியோர் கடந்த சில தினங்கள் ஆக்சிஜன் லாரி மதுரை அரசு மருத்துவமனைக்கு வரும் வரை காத்திருந்து, ஆக்சிஜனை நிரப்பிய பின்னர் நள்ளிரவில் புறப்பட்டுச் செல்கின்றனர்.கொரோனாவைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் இன்னொரு பகுதியாக ஆக்சிஜன் படுக்கை எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில், மதுரை அருகிலுள்ள தோப்பூரில் 500 ஆக்சிஜன் படுக்கை வசதியுடன் கூடிய சிறப்பு சிகிச்சை மையம் உருவாக்கப்பட்டுள்ளது.வெள்ளிக்கிழமை (மே 21) மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து, அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் காலை  10.50 மணிக்கு கார் மூலம் தோப்பூர் மருத்துவமனைக்கு வந்தார். அவருக்கு  சிகிச்சை மையத்தில் செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்துஅதிகாரிகள் விளக்கமளித்தனர்.

இதைத்தொடர்ந்து, அவர் 500 ஆக்சிஜன் படுக்கை வசதிகொண்ட சிகிச்சை மையத்தை திறந்து வைத்தார். பின்னர், சிகிச்சை மையம்முழுவதையும் சுற்றிப் பார்த்த முதல்வர், அங்குள்ள சிகிச்சை வசதிகள் குறித்தும் அமைச்சர்கள், ஆட்சியர் அனிஷ்சேகர், மருத்துவர்கள், செவிலியர்களிடம் கேட்டறிந்தார்.கொரோனா சிகிச்சை மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.  நிகழ்வில் மக்களவை உறுப்பினர்கள் கனிமொழி (தூத்துக்குடி), சு.வெங்கடேசன்,  (மதுரை), தென் மண்டல ஐ.ஜி 
டி.எஸ்.அன்பு, தமிழக அமைச்சர்கள் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், பெ.மூர்த்தி, மா.சுப்பிர மணியன், ஐ.பெரியசாமி, தங்கம் தென்னரசு, அனிதா ராதா கிருஷ்ணன்,  கொரோனா தடுப்பு மற்றும் கண்காணிப்பு அலுவலர் சந்திரமோகன், தோப்பூர்  மருத்துவமனை முதன்மையர் டாக்டர்  காந்திமதிநாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

;