tamilnadu

img

சிஐடியு-வின் தொழில் பாதுகாப்பு சிறப்பு கருத்தரங்கம்

சிஐடியு-வின் தொழில் பாதுகாப்பு சிறப்பு கருத்தரங்கம்

கோவை, அக். 27- சிஐடியு மாநில மாநாட்டு பிரச் சாரத்தின் ஒருபகுதியாக கோவை சூலூரில் உள்ள அண்ணா சீரணி  கலையரங்கில், சிஐடியு சார்பில் தொழில் பாதிப்பு குறித்த கருத்தரங் கம் ஞாயிறன்று நடைபெற்றது. நவம்பர் 6 முதல் 9 வரையில் சிஐ டியு 16 ஆவது மாநில மாநாடு நடை பெற உள்ளது. இம்மாநாட்டின் முக் கியத்துவம் குறித்து பட்டிதொட்டி யெங்கும் கொண்டு செல்லும் பொருட்டு சிஐடியுவினர் பல்வேறு  பிரச்சார வடிவங்களை மேற் கொண்டு வருகின்றனர். இதன்ஒருபகுதியாக கோவை சூலூரில் தொழில் பாதுகாப்பு கருத் தரங்கம் நடைபெற்றது. நிகழ்விற்கு  சிஐடியு சூலூர் தாலுகா ஒருங் கிணைப்புக் குழு உறுப்பினர் ஜெ.  ரவிச்சந்திரன் தலைமை வகித்தார்.  பொதுத் தொழிலாளர் சங்க உறுப்பி னர் ராஜப்பா வரவேற்புரையாற்றி னார். சிஐடியு மாவட்டச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் வேலுசாமி, மாவட்டக் குழு உறுப் பினர்கள் ஜோதிபாசு, சுப்பிரமணி, விஜயராகவன் ஆகியோர் சிறப்புரை யாற்றினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் தாலுகா செயலாளர் சந்தி ரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இக், கருத்தரங்கில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விதித்த 50 சதவீத வரி விதிப்பு மற்றும் மருந்துத் துறை யில் 100 சதவீத வரிவிதிப்பு காரண மாக தொழில்கள் எதிர்கொள் ளும் நெருக்கடிகள் குறித்தும், மூடப் பட்ட இந்தியப் பருத்தி கழகத்தை  மீண்டும் திறந்து, விவசாயிகளிட மிருந்து பருத்தி கொள்முதல் செய்ய  வேண்டும். மூடப்பட்ட என்.டி.சி நூற் பாலைகளை மீண்டும் இயக்க வேண் டும். தனியார் நிறுவனங்களில் உள் ளூர் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும். குறைந்தபட்ச மாத ஊதியமாக ரூ.26  ஆயிரம் வழங்க வேண்டும். 480 நாட்கள் தொடர் பணியாற்றி யவர்களுக்கு பணி நிரந்தரம் செய்து, இ.எஸ்.ஐ  மற்றும் பி.எஃப்  போன்ற சட்டப்பூர்வ பாதுகாப்பு களை அமல்படுத்த வேண்டும். அர சுத் துறைகளில் ஒப்பந்த ஊழியர் களைப் பணி நிரந்தரம் செய்ய வேண் டும் உள்ளிட்டவைகள் குறித்து தலை வர்கள் உரையாற்றினர்.  மேலும், மேற்கண்ட கோரிக்கை களை வலியுறுத்தி, போராட்ட வடி வங்களை தீர்மானிக்க இருக்கும் சிஐ டியு மாநில மாநாடு நவம்பர் 6முதல் 9 ஆம் தேதி வரையில் கோவையில் நடைபெறுகிறது. இம்மாநாட்டில் தொழிலாளி வர்க்கம் பெரும் திர ளாய் பங்கேற்க வேண்டும் என்கிற அழைப்பை விடுத்தனர்.