tamilnadu

img

தஞ்சையில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர், செப்.2-  நீட் தேர்வுக்கு எதிராக போராடி உயிர்  நீத்த மாணவி அனிதாவின் நினைவு நாள் வெள்ளியன்று கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி ஏழை மாணவர்களின்  மருத்துவக் கனவை சிதைக்கும் நீட்  தேர்வை ஒன்றிய அரசு  ரத்து  செய்ய  வேண்டும். இந்தியா முழுவதும் உள்ள  ஒன்றிய அரசின் கீழ் செயல்பட்டு வரும்  பல்கலைக் கழகங்களில் மாணவர் சேர்க்கைக்கு பொதுவான நுழைவுத் தேர்வு  (கியூட்) நடத்தப்படும் என்ற இந்திய  கல்வித்துறை அமைச்சகத்தின் அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  தஞ்சாவூர் மாவட்டம் மன்னர் சரபோஜி  அரசுக் கல்லூரி முன்பு நடைபெற்ற இந்த  ஆர்ப்பாட்டத்திற்கு, இந்திய மாணவர்  சங்க கிளை நிர்வாகி தமிழரசன் தலைமை  வகித்தார்.  மாவட்டச் செயலாளர் சந்துரு  மற்றும் கிளை நிர்வாகிகள் கண்டன உரை யாற்றினர்.