tamilnadu

img

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் : சாய்னா அவுட்

கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தில் டொயோட்டா ஓபன் என்ற பெயரில் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. 

மகளிர் ஒற்றையர்  

இந்த தொடரில் இந்தியாவின் ஒலிம்பிக் நாயகி சிந்து விலகிய நிலை யில், நீண்ட கால இடைவெளிக்குப் பின் சாய்னா கலந்து கொண்டார்.  தொடக்கச் சுற்றில் தாய்லாந்து வீராங்கனையை வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார். வியாழனன்று நடைபெற்ற இரண்டாவது சுற்றில் ஜப்பான் நாட்டு சயாகாவை எதிர்கொண்டார்.  பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சயாகா 21-16, 11-21, 14-21 என்ற செட்கணக்கில் போராடி தோல்வி யுற்று தொடரிலிருந்து வெளியேறினார்.

ஆடவர் இரட்டையர் 
ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ராங்கி ரெட்டி- சிராக் செட்டி ஜோடி இந்தோனேசியாவின் அல்பியான் - முகமது ரியான் ஜோடியை  21-17, 21-19 என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.
 

;