tamilnadu

img

பள்ளிகளில் காமராஜர் பிறந்த நாள் விழா

பெரம்பலூர்/புதுக்கோட்டை,  ஜூலை 15- பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் சிபிஎஸ்இ பள்ளியில் காமராஜர் 117-வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. பள்ளி தாளாளர் டாக்டர் ஆ.ராம்குமார் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் டாக்டர் சிவகாமி முன்னிலை வகித்தார். காமராஜர் உருவப் படத்திற்கு மாணவ- மாணவிகளும் ஆசிரியர்களும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். ஒருவர் பிறந்து எப்படி வாழ்ந்து மறைய வேண்டும் என்பதற்கு காமராஜர் ஒரு உதாரணம் என்ற மாணவ மாணவிகளின் விழிப்பு ணர்வு நாடகம் நடை பெற்றது. நிகழ்ச்சி ஏற்பாடு களை பள்ளி துணை முதல்வர் சாரதா செந்தில்குமார் மற்றும் சந்தி ரோதயம், ஹேமா ஆகியோர் செய்திருந்தனர். இதே போல் புதுக்கோட்டை திருக்கோ கர்ணம் ஸ்ரீ வெங்கடே ஸ்வரா மெட்ரிக் பள்ளி யில் நடைபெற்ற பெற்ற விழாவிற்கு பள்ளி முதல்வர் கவிஞர் தங்கம்மூர்த்தி தலைமை வகித்தார். விழா வில் மாணவ மாண விகளுக்கு ‘காமராசரின் சாதனைகள்’, ‘காமராசரின் எளிமை வாழ்வு’ மற்றும் ‘கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காம ராசர்’ போன்ற தலைப்பு களில் பேச்சுப் போட்டி நடைபெற்றது. மழலை யர் வகுப்புக் குழந்தை கள் காமராசர் வேட மணிந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். விழா வில் துணை முதல்வர் குமா ரவேல், ஒருங்கிணைப்பாளர்கள் கௌரி, ரம்யா, வசுமதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. பின்னர் காமராஜரின் பிறந்தநாளை நினைவு கூறும்விதமாக பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. தலைமை ஆசிரியர் கோவிந்தராஜ், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சின்னச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

;