tamilnadu

img

ஈரான் நாட்டிடம் தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்குவோம்

புதுதில்லி:
ஈரான் நாட்டிடமிருந்து, கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தப்போவதில்லை என்று மத்திய அரசு திடீரென துணிச்சல் காட்டியுள்ளது. யாரோ ஒரு மூன்றாவது நாட்டிற்காக, நிலையை மாற்றிக் கொள்ள முடியாது என்றும் கூறியுள்ளது.

அணுசக்தி உடன்பாட்டை ஈரான் மீறிவிட்டதாக கூறி, அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதித்த அமெரிக்கா, ஈரானுடன் எண்ணெய் வர்த்தகம் மேற்கொள்ளும் அனைத்து நாடுகள் மீதும் ருளாதாரத் தடை விதிக்கப்படும் என்று மிரட்டல் விடுத்தது. ஈரானுடனான வர்த்தகத்தை 6 மாதத்திற்குள் முறித்துக் கொள்ள வேண்டும் என்று கெடு வைத்தது.இந்த கெடு, கடந்த மே 2-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், இந்தியஅரசு ஈரானுடனான வர்த்தகத்தை நிறுத்திக் கொண்டு விட்டதாக செய்திகள் வெளியாகின. இந்த விவகாரத்தில், இந்தியாவுக்கு விலக்கு கோரப்பட்ட நிலையில், அதனை அமெரிக்கா ஏற்கவில்லை என்று அன்றைய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார். ஒருகட்டத்தில், அமெரிக்கா, சவூதி அரேபியா ஆகிய நாடுகளிடமிருந்து எண்ணெய் வாங்குவதற்கான பேச்சுவார்த்தைகளையும் இந்திய அரசு தொடங்கியது. அண்மையில் இந்தியா வந்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பாம்பியோவிடம் இது பற்றி பேசப்பட்டது.

இந்நிலையிலேயே, “ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் உட்பட வர்த் தக பரிவர்த்தனையை நிறுத்தும் எந்ததிட்டமும் இல்லை. அமெரிக்கா தடைவிதித்துள்ளதால் ஈரானுடனான வர்த்தக தொடர்பை இந்தியா துண்டித்துக்கொள்ளாது” என்று வெளியுறவுத்துறை இணையமைச்சர் முரளிதரன் நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.“ஈரானிடமிருந்து தொடர்ந்து கச்சாஎண்ணெய் வாங்கப்படும். அமெரிக்காவின் நிர்ப்பந்தம் காரணமாக, இவ்விஷயத்தில் இந்தியா சமரசம் செய்து கொள்ளாது. மூன்றாவது நாட்டிற்காக இந்தியா தனது நிலைப் பாட்டை மாற்றிக் கொள்ளாது” என்றும் வர் கூறியுள்ளார்.“இந்தியாவுக்கு குறைந்த விலையில், கச்சா எண்ணெய் வழங்குவதற்குஈரான் எப்போதுமே தயாராக இருந்து ருகிறது; நட்பு நாடான இந்தியாவின் நலனில் ஈரான் அக்கறை கொண்டுள் ளது” என்று, 2 நாட்களுக்கு முன்புதான்,இந்தியாவுக்கான ஈரான் தூதர் அலி செகேனி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

;