tamilnadu

img

நகர்ப்புற வேலையின்மை 10 சதவிகிதமாக அதிகரிப்பு... ஜூலையைக் காட்டிலும் ஆகஸ்டில் மோசம்

புதுதில்லி:
இந்தியாவில் ஆகஸ்ட் மாதத்தில் நகர்ப்புற வேலை வாய்ப்பின்மை 10 சதவிகிதமாகஅதிகரித்துள்ளது என்று இந்தியபொருளாதார கண்காணிப்பு மையம் (Centre for MonitoringIndian Economy - CMIE) தெரிவித்துள்ளது.

இந்தியாவில் ஜனவரியில் 7.22 சதவிகிதம், பிப்ரவரியில் 7.76 சதவிகிதம் என்று இருந்தவேலையின்மை, மார்ச் மாதம்கொரோனா பொதுமுடக்கத் திற்குப் பின், தொழிற்துறைக்கு ஏற்பட்ட பாதிப்பால் வேகமாக அதிகரிக்கத் துவங்கியது.இந்திய பொருளாதார கண்காணிப்பு மத்திய மையத்தின் தரவுகள்படி, ஜூலை மாதத்தில் நகர்ப்புற வேலைவாய்ப்பின்மை முறையான துறையில் (Formal Sector)9.15 சதவிகிதமாக இருந்தது. இது ஆகஸ்ட் மாதத்தில் 9.83 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.கிராமப்புறத்தில் ஜூலை மாதம் 6.66 சதவிகிதமாக இருந்தவேலையின்மை ஆகஸ்டில் 7.65 சதவிகிதமாக அதிகரித்துள் ளது. ஒட்டுமொத்தமாக வேலையின்மை ஜூலையில் 7.43 சதவிகிதத்தில் இருந்து 8.35 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.வேலையின்மையால், ஹரியானா (33.5 சதவிகிதம்), திரிபுரா(27.9 சதவிகிதம்) ஆகிய மாநிலங்கள் மோசமான பாதிப்பைச் சந்தித்துள்ளன.

;