tamilnadu

img

சூத்திர, பஞ்சம - பழங்குடிகளே பெரும்பான்மை... இந்து பெரும்பான்மை என்பது கற்பிதம்..!

புதுதில்லி:
இந்து மதம், இந்துப் பெரும்பான்மை என்பதெல்லாம் போலியான கற்பிதங்கள் என்றுஐஐடி பேராசிரியரான திவ்யா திவிவேதி கூறியுள்ளார்.தில்லி ஐஐடி-யில் தத்துவம் மற்றும் இலக்கியத்துறைப் பேராசிரியராக பணியாற்றும் திவ்யா திவிவேதி, இந்திய சமூகம் குறித்த பல்வேறு ஆய்வுகளை தொடர்ந்து மேற்கொண்டுவருபவர் ஆவார். அதனடிப்படையில், மேற்கண்ட கருத்தைஅவர் வெளியிட்டுள்ளார்.இந்து மதம் என்பதே, 20-ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட ஒரு கருத்தாக்கம்தான் என்று கூறியுள்ள திவிவேதி, “இந்துப் பெரும்பான்மை என்ற ஒரு போலியான கற்பிதம் உருவாக்கப்பட்டதில், மகாத்மா காந்திக்கும் பெரும்பங்கு உள்ளது” என்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். இந்தியாவில் சூத்திரர், பஞ்சமர் மற்றும் பழங்குடியின மக்கள்தான் பெரும்பான்மை என்பதை மறைப்பதற்காக, இந்துப் பெரும்பான்மை என்ற கற்பிதம் உருவாக்கப்பட்டதாகவும்; தங்களின் அரசியல் ஆதாயத்திற்காக, உயர்சாதித் தலைவர்கள் உருவாக்கிய போலிகற்பிதங்களை, தற்போதைய கட்டத்தில் உதறியாக வேண் டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

;