புதுதில்லி, மே 18-தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், தில்லியில் தன்னை ஒருவர் கன்னத்தில் அறைந்ததை சுட்டிக்காட்டி பேசியிருக்கும் கெஜ்ரிவால், தனது உயிரை குறிவைத்து பாஜகவினர் தூண்டி விடப் பட்டுள்ளனர் என்று குற்றம் சாட்டியுள்ளார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை அவரது பாதுகாவலர்களே சுட்டுக் கொன்றதுபோல் என்றாவது ஒருநாள் நானும் சுட்டுக் கொல்லப்படுவேன் என்றும் அவர் கூறியுள்ளார்