tamilnadu

img

மாவோயிஸ்டுகளுக்கு பொருட்கள் சப்ளை... சத்தீஸ்கர் பாஜக தலைவர் சிக்கினார்...

தண்டேவாடா:
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளுடன் தொழில்முறை கூட்டு வைத்திருந்த பாஜகவின் மாவட்டத் துணைத் தலைவர் ஜகத் பூஜாரி என்பவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

“கடந்த சில மாதங்களாக, ஆலமிஉட்பட பல மாவோயிஸ்ட் தலைவர் களின் அழைப்புகளை நாங்கள் இடைமறித்து வந்தோம். அப்போது பூஜாரியின் செல் எண் பலமுறை பொருட்கள்வழங்குவது தொடர்பான ஆலமியின்உரையாடல்களில் இடம்பெற்றிருந் தது. சமீபத்தில் மவோயிஸ்ட் தலைவர்ஆலமிக்கு ஒரு டிராக்டர் அவசியமாக இருந்தது. அவரிடம் நிறைய பணமும் இருந்துள்ளது. எனவே டிராக்டர் வாங்கி தருமாறும், டிராக்டர் வாங்குவதற்கு யாருடைய ஆவணங்களை பயன்படுத்த வேண்டும் என்றும் ஜகத் பூஜாரியுடம் ஆலம் விரிவாக உரையாடி இருந்தார். ஆலமியின் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் யூசெண்டி என்பவரின் மனைவிஆவணங்களை இதற்குப் பயன்படுத்தவேண்டு்ம் என்பதையும் ஆலமி தெளிவாக குறிப்பிட்டிருந்தார்இதனை வைத்தே, தாண்டேவாடா மாவட்டம் கீதம் என்ற இடத்தின்அருகே டிராக்டருடன் ஜகத் பூஜாரியையும், ரமேஷ் யூசெண்டியையும் கைதுசெய்தோம்” என்று போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் பல்லவ் கூறியுள்ளார்.

விசாரணையில் மாவோயிஸ்ட்டுகளுக்கு வேண்டிய சீருடைகள், காலணிகள், காகிதம், அச்சுப்பொறிகள், தோட்டாக்கள், பேட்டரிகள் மற்றும்ரேடியோ செட் போன்ற பொருட்களை,ஜகத் பூஜாரி கடந்த 10 ஆண்டுகளாகசப்ளை செய்து வந்தது தெரியவந்துள் ளது. பிடிபட்ட பூஜாரியிடமிருந்து 5 லட்சம் ரூபாய் ரொக்கம், 9 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள புதிய டிராக்டர் ஆகியவற்றையும் காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

;