tamilnadu

img

ராணுவ கமாண்டர் நியமனத்தில் மத்திய அரசின் பிற்போக்குத்தனம்... பெண் ராணுவ அதிகாரிகள் கடும் கண்டனம்

புதுதில்லி:
ராணுவத்தின் அனைத்து நிலைகளிலும், பெண்களைப் பணியமர்த்துவது தொடர்பான வழக்கு, உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, விமானப்படை, கடற்படைஆகியவற்றில் பெண்களுக்குமுழுமையான பணிச்சேவைவழங்க வேண்டும் என வழக்குதொடரப்பட்டுள்ளது.இந்த வழக்கு அண்மையில் விசாரணைக்கு வந்தபோது, “ராணுவத்தில் பெண்களுக்கு ஏன் கமாண்டர் பதவி வழங்கக் கூடாது?” என நீதிபதிகள் கேள்விஎழுப்பினர்.

அதற்கு “ஆண்களை விடபெண்களுக்கு உடல் வலிமைகுறைவு; இதனால் ஒரு படைக்குத் தலைமை வகிக்கும் கமாண்டர் பதவியை பெண்களுக்கு வழங்குவது சிரமம்” என்றுபிப்ரவரி 4-ஆம் தேதி மத்திய அரசுதனது பதில் மனுவில் கூறியிருந்தது.இது பெண் ராணுவ அதிகாரிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. “ராணுவ கமாண்டர் பதவிகளுக்கு பெண்கள் தகுதியற்றவர்கள் என மத்தியஅரசு எவ்வாறு கூறுகிறது?” என்றுஅவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். உச்சநீதிமன்றத்தில் இதுதொடர்பாக மனு ஒன்றையும் தாக்கல் செய்துள்ளனர்.“மத்திய அரசின் மனுவில் கூறப்பட்டுள்ள காரணங்கள் அனைத்தும் தவறான புரிதலின்அடிப்படையில் எடுக்கப்பட்டு இருக்கின்றன. இந்த அரசின்பிற்போக்கான சிந்தனையை மட்டுமே, அது வெளிப்படுத்துகிறது. அனுபவ ரீதியான மற்றும்புள்ளி விவரங்களின் அடிப்படையில் எந்த தகவலையும் அரசு சேகரிக்கவில்லை. விமானப் படையின் ஒரு பிரிவிற்குத் தலைவராகஇருக்கும் மின்ட்டி அகர்வாலின் சிறப்பான நடவடிக்கைகளை பாராட்டி, இதே மத்திய அரசுதான் அவருக்கு ‘யுத் சேவா’ விருது வழங்கியிருக்கிறது” என்று அந்த மனுவில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

;