tamilnadu

img

மக்களவை சபாநாயகர் ஆகிறார் ஓம்.பிர்லா

புதுதில்லி:
இரண்டு முறை பாஜக எம்.பி.யாக பொறுப்பு வகித்துள்ள ஓம் பிர்லா, மக்களவையின் சபாநாயகராக பொறுப்பேற் பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மக்களவைத் தேர்தலில் பாஜக 303 இடங்களை வென்றது. பிரதமர் மோடி தலைமையில் பாஜக இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. 17ஆவது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் திங்களன்று தொடங்கியது. அப்போது புதிதாகப் பதவியேற்ற எம்.பி.களுக்கு இடைக்கால சபாநாயகராகப் பொறுப்பேற்றுக்கொண்ட வீரேந்திர குமார் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
புதிய சபாநாயகராக மேனகா காந்தி நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், தற்போது ராஜஸ் தான் எம்.பி.யான ஓம்.பிர்லா சபாநாயகராகப் பொறுப்பேற்பார் என்று தகவல்
கள் தெரிவிக்கின்றன. இதுவரை அதிகாரப்பூர்வமாகத் தகவல் வெளியாகவில்லை என்றாலும், ஓம் பிர்லாவின் மனைவி அமிதா பிர்லா இதை உறுதிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “இது எங்களுக்கு மிகவும் பெருமையான விஷயம். அவரைத் தேர்வு செய்தமைக்கு அமைச்சரவைக்கு நன்றி” என்று கூறியுள்ளார். ஆனால் ஓம் பிர்லா, “எனக்கு இதுகுறித்த தகவல் எதுவும் கிடைக்கவில்லை” என்று கூறியுள்ளார். பாஜகவின் செயல் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் ஜே.பி.நட்டாவை சந்தித்த பின்னர் இந்த கருத்தை ஓம்.பிர்லா தெரிவித்துள்ளார்.மக்களவையின் புதிய சபாநாயகரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் (ஜூன் 19) இன்று நடைபெற உள்ளது. 2019 மக்களவைத் தேர்தலில் ராஜஸ்தான் கோட்டா தொகுதியில் போட்டியிட்ட ஓம்.பிர்லா 2.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸைத் தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

;