tamilnadu

img

நாடாளுமன்ற கேண்டினில் எம்பிகளுக்கு இனி  மலிவு விலை உணவு கிடையாது 

நாடாளுமன்ற கேண்டீனில் இனி மலிவு விலை உணவு கிடையாது என்று தகவல்கள்வெளியகி உள்ளது. 

நாடாளுமன்ற கேண்டீனில் மிக மலிவான விலையில் உணவு பொருட்கள் விற்கப்படுகின்றன.  இந்த நிலையில், நாடாளுமன்ற கேண்டீனில் இனி எம்.பி.,க்களுக்கு சலுகை விலையில் உணவு கிடையாது என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில்
கேண்டீனுக்கு ஒதுக்கப்பட்டு வந்த மானியத்தை ரத்து செய்ய எம்.பி.,க்கள் ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, கேண்டீனில் உள்ள உணவுகள் இனி உரிய விலையில் விற்கப்படும் என தெரிகிறது. 
மானியம் ரத்து செய்யப்பட்டதால் ரூ.17 கோடி ஆண்டுதோறும் சேமிக்கப்படும். மக்களவை சபாநாயகர் ஓம்.பிர்லாவின் அறிவுறுத்தலை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.