tamilnadu

img

பசுவதை பெயரில் அதிகரித்த வன்முறை வட மாநிலங்களில் பசு வளர்ப்பு குறைந்தது!

புதுதில்லி:
பசுவதை என்ற பெயரில் நடத்தப்படும் தாக்குதல்கள் காரணமாக, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் பசு வளர்ப்பது குறைந்து வருவதாகமுக்கியத் தகவல் வெளியாகியுள்ளது.மத்தியில் பாஜக ஆட்சி அமைத்ததில் இருந்து பசுவின் பெயரில், மனிதர்களைத் தாக்கி படுகொலை செய்வது அதிகரித்து விட்டது. பசு குண்டர்களின் தாக்குதலுக்கு பலர் உயிரிழந்துள்ளனர். இதனால் பசு வளர்ப்பதே ஆபத்தான தொழிலாக மாறி, வடமாநிலங்களில் பசு வளர்ப்பது குறைந்து விட்டதாக கால்நடை கணக்கெடுப்பு விவரங்கள் தெரிவிக்கின்றன.குறிப்பாக, உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த 2012-ஆம் ஆண்டில் 1 கோடியே 96 லட்சமாக இருந்த பசுக்களின் எண்ணிக்கை, தற்போது 1 கோடியே 88 லட்ச மாகவும் குறைந்து விட்டது. ஒடிசாவில் 15 சதவிகிதம், மகாராஷ்டிரா வில் 10.7 சதவிகிதம், மத்தியப் பிரதேசத்தில் 4.42 சதவிகிதம் வரை பசு வளர்ப்பு குறைந்துள்ளது.பாஜக, ஆர்.எஸ்.எஸ். போன்றஇந்துத்துவா கும்பலின் வன்முறை காரணமாக, இறைச்சித் தொழில் செய்பவர்கள், இறைச்சி வர்த்தகர்கள் பாதிக்கப்படுவதைக் காட்டிலும், பசு வளர்ப்பைத் தொழிலாக கொண்ட விவசாயிகள்தான் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

;