புதுதில்லி, மார்ச் 21- இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 275 பேராக அதிகரித்துள்ளது. இந்தியாவில் 219 இந்தியர்கள் மற்றும் 39 வெளிநாட்டினருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள் ளது. இதுவரை 4 பேர் உயிரிழந் துள்ளனர் என்று மத்திய அரசு தெரி வித்துள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் அதிக பட்சமாக 52 பேரும், கேரளாவில் 40 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப்பிரதேசத்தில் 23 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப் பது கண்டறியப்பட்டுள்ளது. பாதிப்பு களில் இருந்து 9 பேர் மீண்டுள்ள னர். பஞ்சாபில் மேலும் மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மாநிலத் தில் கொரோனா பாதிப்பு 6 பேராக அதிகரித்துள்ளது.