tamilnadu

img

இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே அஞ்சல் துறைத் தேர்வுகள்

புதுதில்லி:
புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் இந்தித் திணிப்பு நடவடிக்கைகளை மோடி அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.  இதற்கு எதிர்ப்பு எழும்போது சற்று பின் வாங்கினாலும் நிலையை மாற்றிக் கொள்வதில்லை.அந்த வகையிலேயே இந்திய அஞ்சல்துறைக் கான தேர்வுகள் இனி இந்திமற்றும் ஆங்கிலம் மொழிகளில் மட்டுமே நடத்தப்படும்என்று மோடி அரசு அறி வித்துள்ளது.அஞ்சல்துறை நடத்தும்,பல்திறன் பணியாளர்கள் (Multi Tasking Staff), மெயில் குவார்ட் (Mail Guard), அஞ்சல்காரர் (Postman), அஞ்சலக உதவியாளர் (Postal Assistant),சார்டிங் அசிஸ்டெண்ட் (Sorting Assistant) போன்ற பணியிடங்களுக்கான தேர்வுகள், அந்தந்த மாநில மொழிகளிலேயே நடைபெற்று வந்தன. அஞ்சல் துறைப் பணிகளுக்கான தேர்வுப் பாடத்திட்டங்கள், கடந்த மே 10-ஆம் தேதி மாற்றி அமைக்கப்பட்டன. அப்போதும் கூட, “அஞ்சல் துறைத் தேர்வுகள், பொது வாக இந்தி மற்றும் ஆங்கிலத்திலும், இந்தி மொழி பேசாத மாநிலங்களைப் பொறுத்தவரை - 23 மாநிலமொழிகளிலும் வினாத்தாள்கள் அமையும்” என்று தான் கூறப்பட்டிருந்தது.

ஆனால், தற்போது முதல் தாளுக்கான தேர்வு வினாக்கள் ஆங்கிலம், இந்தி என்ற இரண்டு மொழிகளில் மட்டுமே அமையும் என்று அறிவிப்பு வெளியிட்டு, மோடி அரசு புரட்டுத் தனம் செய்துள்ளது.இரண்டாம் தாளுக்கான தேர்வு கள் மட்டும் ஆங்கி லத்திலிருந்து அந்தந்த மாநில மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு வழங்கப் படும் என கூறியுள்ளது.இதன்மூலம், மாநில மொழிகளின் உரிமையைப் பறித்த மோடி அரசு, இந்தி பேசாத மாநில மக்களின் வேலைவாய்ப்புக் கனவிலும் மண்ணை அள்ளிப் போட்டுள்ளது.

;