tamilnadu

img

பாஜக முன்னாள் எம்எல்ஏ குல்தீப் செங்கார் குற்றவாளி.... தில்லி நீதிமன்றம் அறிவிப்பு

புதுதில்லி:
உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில், 17 வயது சிறுமியை, அத்தொகுதியின் பாஜக எம்எல்ஏ குல்தீப்சிங் செங்கார் உள்ளிட்டோர் கும்பல் வல்லுறவுக்கு உள்ளாக்கினர். அத்துடன் இளம்பெண்ணின் தந்தையையும் அடித்துப் படுகொலை செய்தனர். கடந்த 2017-ஆம்ஆண்டு இச்சம்பவம் நடந்தது.

இந்நிலையில், சிறுமி வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட வழக் கில், கடந்த டிசம்பர் மாதம் தீர்ப்புவழங்கிய தில்லி நீதிமன்றம், குல்தீப் சிங் செங்காருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.இந்நிலையில், சிறுமியின் தந்தை அடித்துக் கொல்லப்பட்ட வழக்கிலும் குல்தீப் சிங் செங்கார்குற்றவாளி என்று தில்லி நீதிமன் றம் புதனன்று அறிவித்துள்ளது.“கொலை செய்ய வேண்டும்என்ற உள்நோக்கம் தாக்குதலில் இல்லை என்றாலும், கடுமையாக தாக்கப்பட்டதாலேயே பெண் ணின் தந்தை உயிரிழந்தார். எனவே, இவ்வழக்கில் குல்தீப் சிங் செங்கார், அவரது சகோதரர் அதுல் சிங் செங்கார் ஆகியோர் குற்றவாளிகள்தான்” என்று மாவட்ட நீதிபதி தர்மேஷ் சர்மா தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

;