tamilnadu

img

தலித் மக்கள் கோவில் நுழைவு... கேவிபிஎஸ் நடத்திய போராட்டம் வெற்றி

கர்னூல்:
ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் 200 ஆண்டுகள் பழமையான கோயிலுக்குள், முதன்முறையாக தலித் மக்கள் ஆலயப் பிரவேசம் மேற்கொண்டனர்.சாதி இந்துக்கள், வழக்கம்போல இந்த ஆலய நுழைவுப் போராட்டத் திற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில்,அதனை குல விவக்ஷா போராட்டசமிதி (KVPS), மாதிகா இடஒதுக் கீட்டு போராட்ட சமிதி (MRPS) ஆகியவற்றின் தலைமையில் தலித் மக் கள் வெற்றிகரமாக முறியடித்தனர்.

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தின் பட்டிகொண்டா மண்டலத் திற்கு உட்பட்டது, ஒசூர் கிராமம் ஆகும். இங்கு சுமார் 300 தலித் குடும்பங்கள் வசிக்கின்றன. இந்தியாவின்பெரும்பாலான கிராமங்களைப் போலவே இங்கும் தீண்டாமைக் கொடுமை இருந்து வந்தது. பல்வேறு வகைகளிலும் தலித்துக்கள் உரிமைமறுக்கப்பட்டு வந்தனர். குறிப்பாக, ஒசூரின் கிராம தெய்வமாக கருதப் படும் வீரபத்திரசாமி கோயிலுக்குள் அவர்கள் நுழைய முடியாத நிலை இருந்தது.இந்நிலையில், முதல் தலைமுறையாக கல்வி வாய்ப்பைப் பெற்றதலித் இளைஞர்கள், தங்களுக்கு இழைக்கப்படும் தீண்டாமை கொடுமை குறித்து கேள்வி கேட்கத்துவங்கினர். தங்களை வீரபத்திரசாமியின் ‘பீர்லா பண்டுகா’ (முஹர்ரம்) ஊர்வலங்களில் சேர்க்க வேண்டும் என்று கடந்த செப்டம்பர் மாதம் கோரிக்கை வைத்தனர்.

ஆனால், சாதி இந்துக்கள் அதற்கு மறுத்துவிட்டனர். மேலும்ஆத்திரமடைந்த சாதி இந்துக்கள், பேச்சுவார்த்தைக்கு வந்திருந்த காவல்துறையினர் மீதே கற்களைவீசித் தாக்குதல் நடத்தினர். வாகனங்களையும் சேதப்படுத்தினர்.இது முதன்முறையாக ஒசூர் கிராமத் தீண்டாமைக் கொடுமையை ஊடகங்களின் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்புமுன்னணியைப் போல, ஆந்திராவில்செயல்படும் அமைப்பான ‘குல விவக்ஷா போராட்ட சமிதி’ (KVPS),மாதிகா இடஒதுக்கீட்டு போராட்ட சமிதி (MRPS) உள்ளிட்ட அமைப்புக்களும், மனித உரிமைகள் இயக்கத்தினரும் ஒசூர் தீண்டாமைப் பிரச்சனையில், தலித் மக்களுக்கு ஆதரவாகத் திரண்டனர். அத்துடன், கோயில் நுழைவுப் போராட்டத்தையும் அறிவித்தனர்.இது அரசு அதிகாரிகளுக்கும், சாதி இந்துக்களும் நெருக்கடியை ஏற்படுத்தியது. மாவட்ட அதிகாரிகள், சாதி இந்துக்களுடன் நான்கு கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தினர். தலித்துக்களை கோயிலுக்குள் அனுமதிக்காமல் இருக்க முடியாது என்று சாதி இந்துக்களிடம் எடுத்து
ரைத்து, சமாதானமாகப் போகுமாறு அறிவுறுத்தினர். டிஎஸ்பி நாராயண ரெட்டி மற்றும் வருவாய் அலுவலர் ஏ.பாலகணேசய்யா ஆகியோர், இப்பேச்சுவார்த்தையை நடத்தினர்.

அதைத்தொடர்ந்து, கடந்த சனிக்கிழமையன்று பட்டிகொண்டா நகரில் உள்ள அம்பேத்கர் சிலையிலிருந்து 4 கி.மீ. தூரம் ஒசூருக்கு பேரணியாக வந்த 300 தலித் குடும்பங்கள், வீரபத்திரசாமி கோயிலுக்குள் நுழைந்து, தங்களின் வழிபாட்டு உரிமையை நிலைநாட்டினர்.மேலும் தலித் மக்களின் கோயில் நுழைவையொட்டி, ஒசூர்பஞ்சாயத்து அலுவலகம் அருகே சமபந்தி விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில், ஒசூரின் சாதியப் பாகுபாடு முடிவுக்கு வந்துவிட்டதை வெளிப்படுத்தும் வகையில், கிராமவாசிகள், மாவட்ட அதிகாரிகள் மற்றும் பல்வேறு சாதி அமைப்புகளின் நிர்வாகிகள் ஒன்றாக அமர்ந்து உணவருந்தும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

;