tamilnadu

img

ஜாப் வேலைகளின் மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்திடுக! மக்களவையில் பி.ஆர். நடராஜன் வலியுறுத்தல்

புதுதில்லி, ஜூலை 9- ஜாப் வேலைகளின் மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் பி.ஆர். நடராஜன் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடை பெற்று வருகிறது. மக்களவையில் திங்கள் அன்று  நாடாளுமன்ற நடத்தை விதிகள் 377ஆவது பிரிவின்கீழ் பி.ஆர். நடராஜன் பேசியதாவது: உலகில் அனைத்து பொருள்களும் மற்றும் சேவைகளும் பல நபர்களால் பல கட்டங்களாக, வேலை பிரிவினை வழியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒரு பொருளை உருவாக்குவதில் தனிநபர்கள், அமைப்புகள் மற்றும் நாடுகள் அதில் மிகவும் சிறப்பான முறையில் திறமைபெற்றவர்களைப் பயன்படுத்திக் கொண்டு, அவர்கள் அனைவரையும் கூட்டாக இணைத்தோ அல்லது வர்த்தகரீதியாக மற்ற வர்களின் திறமைகளைப் பெற்றோ செய்து வருகின்றன. இதேபோன்றே நம் நாட்டில் புகழ் பெற்ற பல நிறுவனங்களின் உற்பத்திப் பொருள் களும் தனிநபர்களைப் பயன்படுத்தி ஜாப் வேலைகளைச் (job work) செய்து வருகின்றன.

ஜாப் தொழிலாளி
நம் பொருள்கள் மற்றும் சேவைகள் வரிச் சட்டத்தின் கீழ் (GST Act-இன்கீழ்) ஜாப் வேலை என்பதன் பொருள், மற்றொரு நபருக்குச் சொந்த மான பொருள்களின் மீது தனிநபர் ஒருவரால் மேற்கொள்ளப்படும் வேலை என்பதாகும். (any treatment or process undertaken by a person on goods to another registered person) இவ்வாறு ஜாப் வேலையைச் செய்யும் நபர், ஜாப் தொழிலாளி என்று அழைக்கப்படுகிறார். ஒரு பொருளை உற்பத்தி செய்வதில் ஒரு ஜாப் தொழிலாளியின் பணி ஒரு பகுதியாகவோ அல்லது முழுமை யாகவோ அமைந்திடும். இவ்வாறு, பல சிறிய மற்றும் நடுத்தரத் தொழில்முனைவோர்கள் இத்தகைய ஜாப் வேலைகளைச் சார்ந்தே முழுமையாக இருந்து வருகிறார்கள்.  அவர்கள் ஜாப் வேலைகளை எடுத்துக் கொள்ளும்போது, அப்பொருள்களின் பிரதான உற்பத்தியாளர்கள் அவற்றுக்குத் தேவையான அனைத்து மூலப் பொருள்களையும் மற்றும் உபகரணங்களையும் ஜாப் தொழிலாளர் களிடம் அளித்துவிடுவார்கள். அவர்கள் அவற்றைப் பெற்றுக்கொண்டு அப்பொருள்களைச் செய்து தந்துவிடுவார்கள். இவ்வாறு ஒரு ஜாப் தொழிலாளியைப் பொருத்தவரை, அவர்கள் எதையும் வாங்கிக் கொண்டுமில்லை, அதே போன்று அவர்கள் எதையும் விற்றுக்கொண்டு மில்லை. அதேபோன்று புதிதாக அவர்கள் ஒன்றும் தயாரித்திடுவதுமில்லை.

ஒரு பொருளுக்கு பலமுறை ஜிஎஸ்டி வரி
இவ்வாறு ஒரு ஜாப் தொழிலாளியால் செய்துதரப்பட்ட, ஒரு பொருளின் பாதி முடிந்த பொருளையோ அல்லது முற்றிலுமாக முடித்து வைக்கப்பட்ட பொருளையோ அப்பொருளின் பிரதான உற்பத்தியாளர் அந்த ஜாப் தொழி லாளியிடமிருந்து பெற்றுக்கொண்டு, பின்னர் அவர் அதனை தன்னுடைய நுகர்வோருக்கு விற்பனை செய்கிறார்.  இவ்வாறு அவர் தன் நுகர்வோருக்கு விற்பனை செய்யும்போது மீண்டும் ஒருமுறை  அவரிடமிருந்து ஜிஎஸ்டி வரி வசூல் செய்யப் படுகிறது. இவ்வாறு ஜாப் வேலைகளில் ஒரு பொருள் உற்பத்திச் செய்யப்படுகையில் பல  கட்டங்களை அது தாண்டுகிறது. இவ்வாறு அது மேற்கொண்டிடும் ஒவ்வொரு கட்டத்திலும் தற்சமயம் ஜிஎஸ்டி வரி அதன்மீது சுமத்தப்படு கிறது. அதாவது ஒரே பொருளுக்கு பல தடவை கள் ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டியிருக்கிறது. இவ்வாறு சுமத்தப்படும் அத்தனை ஜிஎஸ்டி  வரிகளும் கடைசியாக அதனை வாங்கிடும் சாமானியனின் மீது, அதாவது பொருளை மற்றும் சேவைகளை வாங்கும் நபர்மீது, சுமத்தப்படு கிறது. இவ்வாறு சிறிய மற்றும் நடுத்தர உற்பத்தியாளர்கள் உற்பத்தி செய்திடும் பொருள்களுக்கு பல கட்டங்களில் ஜிஎஸ்டி வரி  சுமத்தப்படுவதால், இவர்களின் வர்த்தகமே பெரும் பாதிப்புக்கு உள்ளாகி பலர் தங்கள் வர்த்தக நிறுவனங்களை மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். நான் மேலே சொன்ன காரணங்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டு, மத்திய அர சாங்கம் ஜாப் வேலைகளின் மீது ஜிஎஸ்டி வரி விதிப்பதை ரத்து செய்திட உரிய நட வடிக்கைகளை உடனடியாக எடுத்திட வேண்டி யது அவசியம் என்று வலியுறுத்துகிறேன். அப்போதுதான் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோர்கள் ஏதாவது வேலை களைப் பெற்று, எவ்விதச் சிரமமுமின்றி தங்கள் ஜீவனத்தை நடத்திட முடியும். இவ்வாறு பி.ஆர். நடராஜன் பேசினார்.

;