tamilnadu

img

மத்திய பாஜக ஆட்சியில் ரிசர்வ் வங்கியே திவாலாகும் அபாயம்?

புதுதில்லி:
இந்திய ரிசர்வ் வங்கியின் கையிருப்பிலிருந்து, கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 5 லட்சத்து 63 ஆயிரத்து 969 கோடி ரூபாயை, மத்திய ஆட்சியாளர்கள் பெற்றுள்ளனர்.இதில், மோடி தலைமையிலான பாஜக அரசு மட்டும், கடந்த 5 ஆண்டு களில் ரூ. 4 லட்சத்து 41 ஆயிரம் கோடிரூபாயை, ரிசர்வ் வங்கியின் கையிருப்பிலிருந்து அபகரித்துள்ளது. இதுதொடர் பான ஆண்டுவாரியான விவரம் வருமாறு:2008-இல் 15 ஆயிரத்து 11 கோடி ரூபாயை ரிசர்வ் வங்கியின் கையிருப்பு நிதியிலிருந்து மத்திய அரசு பெற்றது. அப்போது மத்திய நிதியமைச்சராக ப. சிதம்பரமும், ரிசர்வ் வங்கி ஆளுநர் ஒய்.வி. ரெட்டியும் இருந்தனர். இதேபோல 2009-இல் 25 ஆயிரத்து 9 கோடியும், 2010-இல் 18 ஆயிரத்து 759கோடி ரூபாயும், 2011-இல் 15 ஆயி ரத்து 9 கோடி ரூபாயும் மத்திய அரசால் பெறப்பட்டுள்ளது. இந்த மூன்றா ண்டுகளிலும் மத்திய நிதியமைச்சராக இருந்தவர் பிரணாப் முகர்ஜி. ரிசர்வ் வங்கி ஆளுநர் சுப்பாராவ்.

2012-இல் 16 ஆயிரத்து 10 கோடி ரூபாய் பெறப்பட்டுள்ளது. அன்றைய நிலையில், மத்திய நிதியமைச்சகம் பிரதமர் மன்மோகன் சிங் கட்டுப்பாட்டில் இருந்தது. ரிசர்வ் வங்கி ஆளுநராக சுப்பாராவ்தான் இருந்தார்.2013-இல் 33 ஆயிரத்து 10 கோடிரூபாயை ரிசர்வ் வங்கியின் கையிருப்பி லிருந்து மத்திய அரசு பெற்றது. நிதியமைச்சராக ப. சிதம்பரமும், ரிசர்வ்வங்கி ஆளுநர் சுப்பாராவும் இருந்தனர்.இந்நிலையில்தான், 2014-இல் நரேந்திர மோடி தலைமையிலான பாஜகஆட்சிக்கு வருகிறது. அப்போதிருந்து தான் ரூ. 50 ஆயிரம் கோடிக்கு அதிக மான தொகை பெறப்படுகிறது. 2014-இல் 52 ஆயிரத்து 679 கோடி ரூபாயும், 2015-இல் 65 ஆயிரத்து 896 கோடி ரூபாயும், 2016-இல் 65 ஆயிரத்து 876 கோடியும் ரிசர்வ் வங்கியிடமிருந்து பெறப்பட்டது. இந்த மூன்றாண்டுகளும் நிதியமைச்சராக இருந்தவர் அருண் ஜெட்லி. ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன்.2017-இல் சற்று குறைந்து, 30 ஆயி ரத்து 659 கோடி ரூபாய் பெறப்படுகிறது. 2018-இல் வழக்கம்போல 50 ஆயிரம்கோடி ரூபாய். இந்த இரண்டாண்டு களின்போதும் நிதியமைச்சர் அருண் ஜெட்லிதான். ரிசர்வ் வங்கி ஆளுநராக உர்ஜித் படேல் மாறியிருந்தார்.

தற்போது 2019-ஆம் ஆண்டிலோ, ஒரேயடியாக 1 லட்சத்து 76 ஆயிரத்து 51 கோடி ரூபாயை ரிசர்வ் வங்கியின் கையிருப்பிலிருந்து மோடி அரசு பிடுங்கியுள்ளது. தற்போதைய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ். ஒட்டுமொத்தமாக பார்த்தால், கடந்த2008 முதல் 2019 வரை மொத்தம் 5 லட்சத்து 63 ஆயிரத்து 969 கோடி ரூபாயை,ரிசர்வ் வங்கியிடமிருந்து மத்திய ஆட்சியாளர்கள் அபகரித்துள்ளனர்.இதில், 2008 முதல் 2013 வரையிலான 6 ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 808 கோடி ரூபாயை அபகரிக்கப்பட்டுள்ளது என்றால், மோடி அரசு 2014 முதல் 2019வரையிலான 6 ஆண்டுகளில் 4 லட்சத்து 41 ஆயிரத்து 161 கோடி ரூபாயை சூறையாடியுள்ளது.

;