tamilnadu

img

இந்தியாவில் மோசமான நிகழ்வுகள் அரங்கேறுகின்றன.... மைக்ரோசாப்ட் சிஇஓ சத்யா நாதெள்ளா எதிர்ப்பு

புதுதில்லி:
மோடி அரசின் குடியுரிமைச்சட்டத்தை, மாணவர்கள், வரலாற்று ஆசிரியர்கள், அறிவுஜீவிகள், திரைக்கலைஞர்கள், முன்னாள் நீதிபதிகள், ஐஏஎஸ் - ஐபிஎஸ் அதிகாரிகள் துவங்கிமாநில முதல்வர்கள் வரை அனைவரும் எதிர்த்து வருகின்றனர்.
இந்நிலையில், பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனமான, ‘மைக்ரோ சாப்ட்’ நிறுவனத் தின் சிஇஓ சத்யா நாதெள்ளாவும், குடியுரிமைச் சட்டத்திற்குஎதிராக கருத்து தெரிவித்துள்ளார்.நியூயார்க், மன்ஹாட்டனில் நடைபெற்ற மைக்ரோசாப்ட் நிறுவன நிகழ்ச்சியின்போது, சத்யா நாதெள்ளா பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித் துள்ளார்.

அதில், “இந்தியாவில் தற்போது எது நடந்துகொண்டிருக் கிறதோ அது மிகவும் வருத்தமளிக்கக் கூடியது. அது மோசமானது. வங்கதேசத்தைச் சேர்ந்த ஒருவர் இந்தியாவில்குடியேறி அடுத்த யூனிகார் னைத் தயாரிப்பதையோ இன்போசிஸ் நிறுவனத்தின் சி.இ.ஓஆவதையோ நான் பார்க்க விரும்புகிறேன்” என்று குறிப் பிட்டுள்ளார்.அத்துடன் அறிக்கை ஒன்றையும் நாதெள்ளா வெளியிட்டுள்ளார். அதில், “ஒவ்வொரு நாடும்அதன் எல்லைகளை வரையறை செய்து, தேசியப் பாதுகாப்பை உறுதி செய்யும். இதனடிப்படையில், குடியேற்றக் கொள்கைகளையும் அந்தந்த நாடுகள் உருவாக்கும். இதுஜனநாயக முறைப்படி அவசியமான ஒன்று என்பதில் ஐயமில்லை” என்று கூறியுள்ள நாதெள்ளா, “இந்திய பாரம்பரியத்தில் பலவித கலாச்சாரங்களுக்கு இடையே நான் வளர்ந்தவன்; அத்துடன் நான் அமெரிக்காவிற்கு குடி பெயர்ந்திருப்பவன். அந்தவகையில், வெளிநாட்டில் குடியேறிய ஒருவர் இந்தியாவில் தொழில் தொடங்குவது அல்லது ஒரு பன்னாட்டு நிறுவனத்தைத் தலைமையேற்று இந்தியப் பொருளாதாரத்துக்குப் பயனுள்ளவராக மாறுவதைப் பார்க்க விரும்புகிறேன்” என் றும் குறிப்பிட்டுள்ளார்.

சத்யா நாதெள்ளாவின் இந்த கருத்தை பலரும் வரவேற்றுள்ளனர். இதுபற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ள வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா, “சத்யா நாதெள்ளா, தான் நினைத்ததை வெளிப்படையாகக் கூறியதைக் கண்டு மகிழ்ச்சியடைகிறேன். இதைச் சொல்ல முதலில் நம் நாட்டில் உள்ள ஐ.டி நிறுவனர்களில் ஒருவருக்குத் தைரியமும் ஞானமும் இருந்திருக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன் அல்லது இப்போதாவது ஞானம் வர வேண்டும் என விரும்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

;