tamilnadu

img

‘அர்ச்சுணன் அம்பில் அணு ஆயுதம் இருந்தது!’ மேற்குவங்க ஆளுநர் ‘நேரில் பார்த்திருக்கிறார்’

புதுதில்லி, ஜன.16- நாட்டுமாட்டுப் பாலில், சொக்கத்தங்கம் இருக்கிறது; குளத்தில் வாத்துக்கள் நீந்து வதால், ஆக்சிஜன் அதிகரிக்கும்; கோமியத்தில் புற்றுநோய்க் கான மருந்து இருக்கிறது என்று இஷ்டத்திற்கு உளறிக் கொட்டு வது, பாஜக அமைச்சர்கள் மற் றும் தலைவர்களின் வழக்கமாகி விட்டது. இந்நிலையில்தான், “மகா பாரதப் போரில் அர்ச்சுணன் பயன் படுத்திய அம்பில் அணு ஆயுதம் இருந்தது” என்று, மேற்குவங்க ஆளுநர் ஜகதீப் தங்கார், தன் பங்கிற்கு ஒரு அணுகுண்டைத் தூக்கிப் போட்டுள்ளார். “1910 அல்லது 1911 ஆண்டு களில்தான் விமானங்கள் மனி தனால் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால், இராமாயண காலத்தி லேயே, ஆகாய விமானங் களுக்கு இணையான பறக்கும் தேர்கள் இருந்தன. மகாபாரதப் போர்க் களத்தில் இல்லாத சஞ்ச யன், ஆனால், அங்கு என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்று பார்த்துக் கொண்டிருந் தான். அதேபோல் மகாபாரதத் தில் அர்ச்சுணன் பயன்படுத்திய அம்பில் அணு ஆயுதம் இருந் தது” என்று பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளார். மேற்குவங்கத் தலைநகர் கொல்கத்தாவில், பிர்லா தொழில்நுட்ப காட்சியகத்தில் கண்காட்சியைத் தொடங்கி வைத்து, ஜகதீப் தங்கார் பேசியுள்ளார். அப்போதுதான் இந்த கதையை அவிழ்த்து விட்டுள்ளார். தங்காரின் இந்தப் பேச்சு, சர்ச்சையைக் கிளப்பிய நிலை யில், இந்திய வரலாறு, கலாச்சா ரம் மற்றும் அறிவியல் பின்புலத் தில், தான் நம்பிக்கை கொண்டி ருப்பதாகவும், ஆனால், ராமரை சிலர் புராண கதாபாத்திரம் என்று கூறுவதை தன்னால் ஏற்க முடியாது என்றும் ‘விளக்கம்’ அளித்துள்ளார்.

;