tamilnadu

img

வேகமெடுக்கும் ‘இந்துத்துவா’ நிகழ்ச்சி நிரல்.... ‘சோசலிசம்’, ‘மதச்சார்பின்மை’ வார்த்தைகளை நீக்க வேண்டுமாம்....

புதுதில்லி:
அரசியலமைப்புச் சட்ட முகப்புரையில் இருக்கும் ‘சோசலிசம்’ மற்றும் ‘மதச்சார்பின்மை’ என்ற இரண்டு வார்த்தைகளையும் நீக்க வேண்டும் என்று,இரண்டு நாட்களுக்கு முன்பு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.வழக்கறிஞர்கள் பல்ராம் சிங், கருணேஷ் குமார் சுக்லா மற்றும் பிரவேஷ்குமார் என்பவர்களின் சார்பில் வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின் என்பவர்இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:கடந்த 1976-ஆம் ஆண்டு, அரசியலமைப்புச் சட்டத்தில் மேற்கொள்ளப் பட்ட 42-ஆவது திருத்தத்தின்படி சோசலிசம், மதச்சார்பின்மை ஆகிய இரு வார்த்தைகள் இணைக்கப்பட்டன. இதுஅரசியலமைப்புச்சட்டம் 19(1)(ஏ) பிரிவில் இருக்கும் பேச்சு மற்றும் கருத்துசுதந்திரம், மற்றும் பிரிவு 25-ல் இருக்கும்மதச் சுதந்திரம் ஆகியவற்றின் உரிமைகளை மீறுவதாகும்.மிகப்பெரிய குடியரசான பாரதத்தின் கலாச்சார, வரலாற்று கருப்பொருளுக்கு எதிரானதாக இந்தத் திருத்தம் இருக்கிறது. இந்தியச் சூழலுக்கு கம்யூனிச கோட்பாட்டை பயன்படுத்த முடியாது, பொருந்தாது. இது இந்தியாவின் மதஉணர்வுகள் மற்றும் சமூக பொருளாதார நிலைமைகளுடன் ஒத்துப்போகவில்லை.ஆதலால், 1976-ம் ஆண்டில் அரசியலமைப்புச்சட்டத்தின் 42-வது திருத்தத்தின்படி சேர்க்கப்பட்ட சோசலிசம், மதச்சார்பின்மை ஆகிய இரு வார்த்தைகளையும் நீக்க உத்தரவிட வேண்டும்.

சோசலிசம், மதச்சார்பின்மை ஆகியஇரண்டு வார்த்தைகள்தான் இந்தியக்குடியரசை அதன் இறையாண்மைக் கான செயல்பாட்டில் கட்டுப்பாடுகளைவிதிக்கிறது. இந்த வார்த்தைகள் குடிமக்களுக்கோ, அரசியல் கட்சிகளுக்கோ, சமூக அமைப்புகளுக்கோ பொருந்தாது.மேலும், மக்கள்பிரதிநிதித்துவச் சட்டம் பிரிவு 29(ஏ)(5)ஆகியவற்றில் ஒரு அரசியல் கட்சி தங்களை தேர்தல்ஆணையத்தில் பதிவு செய்யும்போது இந்த இரு வார்த்தைகளையும் கண் டிப்பாகக் குறிப்பிட வேண்டியதையும் எதிர்க்கிறோம்.இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;