tamilnadu

தரம் தாழ்ந்த கர்நாடக அரசியலின் கேடுகெட்ட கட்சி பாஜக எவரையும் விலைபேசும் மட்டரகமான கூலிப்படை

கர்நாடகாவில் நடைபெறும் படு கேவலமான அரசியல் நிகழ்ச்சிப் போக்குகள், ஆளும் கூட்டணிக்கு ஆதரவு அளித்து வந்த காங்கிரஸ் மற்றும் மதச்சார் பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த 14 சட்டமன்ற உறுப்பினர்களும் சுயேச்சை உறுப்பினர்கள் இருவரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தி ருப்பதன் மூலம் உச்சத்தை எட்டியிருக்கிறது. குமாரசாமி அரசாங்கத்தைக் கவிழ்த்திட கடந்த ஓராண்டு காலமாகவே பாஜக தொடர்ந்து மேற்கொண்டுவந்த நடவடிக்கைகளை அடுத்து, இத்தகு இழி நிலை ஏற்பட்டிருக்கிறது. கர்நாட காவில் 2018 சட்டமன்றத் தேர்தலுக்குப்பின்பு, பாஜக, தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்தி ருந்தபோதிலும், அதனால் ஆட்சியை அமைக்க முடியாது என்பது நன்கு தெரிந்தும்கூட, அந்த உண்மை நிலையினை ஏற்றுக்கொள்வதற்கு பாஜக தயாராக இல்லை என்பதையே இந்நிகழ்ச்சிப்போக்குகள் காட்டுகின்றன. ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களை ஆசை காட்டி, லஞ்சம் கொடுத்து தங்கள் அணியில் சேர்த்துக் கொள்வ தற்கு பாஜக கூச்சநாச்சமின்றி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதற்காக, சில ஆண்டு களுக்கு முன்பு ‘ஆபரேஷன் தாமரை’ என்னும் பெயரில் திட்டமிட்டிருந்த நடவடிக்கைகளில் தற்போது இறங்கி இருக்கிறது. தேர்ந்தெ டுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்கு லஞ்சம் கொடுத்தும், பதவிகள் அளிப்பதாக ஆசை காட்டியும் மற்றும் பல்வேறு வடி வங்களிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட அர சாங்கத்தை அரித்து வீழ்த்துவது இழிசெயலே என்கிற பாஜகவின் இலச்சினையாக மாறி இருக்கிறது. இதற்கு முன்னதாக அருணா சலப் பிரதேசத்திலும், கோவாவிலும் தங்களு டைய அரசாங்கங்களை அமைத்திட பிற கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை கட்சித் தாவல் செய்ய வைப்பதில் பாஜக வெற்றி பெற்றது.

 எவரையும் கையூட்டு அளித்து தம் பக்கம் இழுத்திடமுடியும் என்கிற மிகவும் மட்டரக மான கூலிப்படை உத்திகளைப் பின்பற்றி நாட் டின் ஜனநாயக அமைப்பு முறையை மாசடைய வைத்திருப்பதற்கு மோடி – ஷா இரட்டைய ருக்கு நேரடியாகப் பொறுப்பு உண்டு. கர்நாட காவில், தான் ஆட்சி அமைத்ததிலிருந்தே எவ் விதமான ஒத்திசைவின்றி செயல்பட்டுவந்த காங்கிரஸ் – மதச்சார்பற்ற ஜனதா தளக் கூட்டணியை, அதில் அங்கம் வகிக்கும் உறுப்பி னர்களை கட்சித்தாவல் செய்யவைத்து, கலகலத்துப்போக வைப்பதில் பாஜக வெற்றி பெற்றிருக்கிறது.  காங்கிரஸ் கட்சியும் தன்னுடைய தலை வர்கள் மத்தியில் நடைபெற்றுவந்த பூசல்களின் காரணமாகவும், அவற்றின் சில சட்டமன்ற உறுப்பினர்களிடம் காணப்பட்ட அதிகாரப் பசி யும் இத்தகு மோசமான நிலைக்குப் பெரிதும் பங்களிப்புச் செய்துள்ளது.  கர்நாடக அரசியலில் காணப்படும் தரம் தாழ்ந்த நிலை, இந்தியாவின் அரசியலமைப்பு முறையையே பாதித்திருக்கிற ஓர் ஆழமான நலிவுநிலையின் நேரடி அறிகுறியாகும்.  பெரிய அளவில் பெருமுதலாளிகளின் பண மும் நவீன தாராளமய முதலாளித்துவ மும் ஜனநாயகத்தின் அடிப்படை சாராம் சங்களையும், கட்சி அமைப்பையும் அரித்தி ருக்கிறது. சட்டமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பவர்களில் பெரும் பாலானவர்களுக்கு மக்களுக்குச் சேவை செய்வது என்பதைவிடவும் தங்களின் சொந்த தனிப்பட்ட நலன்கள் ஏராளமாகும். ரியல் எஸ்டேட் பேர்வழிகள், மது வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கும் இழிபிறவிகள், ஒப்பந்தக்கா ரர்கள் மற்றும் கிராமப்புற பணக்காரர்களில் உயர்ந்த பீடத்திலிருப்பவர்கள் முதலானவர்கள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களாகி இருக்கிறார்கள். இத்தகைய இழிநபர்கள்தான் முதலாளித்துவக் கட்சிகளுக்குப் பணத்தை வாரி இறைத்து தேர்தலில் நிற்க டிக்கெட்டு கள் வாங்கி, தேர்தலில் நின்று, வெற்றியும் பெற்று நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களாகி விடுகிறார்கள்.

இத்தகைய இழிநபர்களுக்கு எத்தகைய தத்துவார்த்த நிலைப்பாடோ அல் லது கொள்கையோ கிடையாது.  கர்நாடகாவில் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் குதிரை பேரம் நடப்ப தைப் போலவே, ஆந்திராவிலும் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற, சட்ட மன்ற உறுப்பினர்கள் பாஜகவிற்குத் தாவி யதைப் பார்த்தோம். இவ்வாறு கட்சி தாவிய தெலுங்குதேசம் கட்சி யின் நான்கு மாநிலங்களவை உறுப்பினர்களும் பெரும் வர்த்தகப் புள்ளிகளாவார்கள்.  அரசியலில் வர்த்தகத்தை இணைக்கும் இழிவான போக்குகளில் பாஜக உச்சத்தை எட்டியிருக்கிறது. இது, கார்ப்பரேட்டுகளிடமி ருந்து பலனடைந்த பிரதான கட்சியாக மாறி யிருக்கிறது. பாஜக தன்னுடைய அரசியல் தில்லு முல்லு சூழ்ச்சித்திட்டங்களுக்கு கார்ப்பரேட்டு களிடமிருந்து பெற்ற பணத்தைத்தான் பயன் படுத்திக்கொள்கிறது. எனவேதான், கட்சி விட்டு கட்சி தாவும் சட்டமன்ற உறுப்பினர்கள், மாநி லங்களவை உறுப்பினராக இருக்கின்ற பாஜக தலைவரும் வர்த்தகப் பிரமுகருமான ஒருவரால் அவருக்குச் சொந்தமான ஜெட் விமானம் ஒன்றில் மும்பைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கே ஐந்து நட்சத்திர ஓட்டலில் மிகவும் சொகுசான முறையில் தங்க வைக்கப்படு கிறார்கள். இதில் ஆச்சரியப்படுவதற்கு எது வுமில்லை. கர்நாடகாவில் ஜனநாயக நெறிமுறைகளை பாஜக நாசப்படுத்திடும் நடவடிக்கைகள் என் பது, மோடி அரசாங்கத்தின்கீழ் நாடு முழு வதும் ஜனநாயகத்தின் மீது மிகவும் விரிவான முறையில் ஏவப்பட்டிருக்கும் தாக்குதலின் ஒரு பகுதியேயாகும். ஜனநாயகத்தையும், ஜனநாயகப்பூர்வ மாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்களையும் பாதுகாப்பது என்பதும், தேர்தல் சீர்திருத்தங் கள் கொண்டுவருவது என்பதும், கட்சி தாவு கின்ற மற்றும் லஞ்சஊழலில் ஊறித்திளைக் கின்ற நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பி னர்களைத் தண்டிப்பது என்பதும், வர விருக்கும் நாட்களில் ஜனநாயக சக்திகளின் நிகழ்ச்சிநிரலில் முன்னுரிமை அளிக்கப்படக் கூடிய ஒன்றாக இருந்திட வேண்டும்.  (ஜூலை 14, 2019) தமிழில்: ச.வீரமணி

;