tamilnadu

img

கேரளத்தைச் சேர்ந்தவர் அடித்துக் கொலை?

புதுதில்லி:
கேரளத்திலிருந்து பசுக்களைக் கொண்டு சென்றவர், தில்லியில் மர்மமான முறையில் இறந்து போயுள்ளார். அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
கேரள மாநிலம் செங்கனூரைச் சேர்ந்தவர் விக்ரமன் (55). இவர், உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள ஆசிரமத்திற்கு வழங்குவதற்காக, கடந்த ஜூன்16-ஆம் தேதி அரியவகை பசுக்களுடன், இடுக்கி மாவட்டம் கட்டப்பனையிலிருந்து புறப்பட்டுள்ளார்.

இந்த பயணம் முழுவதுமே அவர்குடும்பத்தினருடன் தொடர்பில் இருந்துள்ளார். ஜூன் 21-ஆம் தேதி, உத்தரப்பிரதேசத்தின் மதுராவில் ஒரு ஆசிரமத்தை அடைந்துள்ளார். அடுத்து அவர் தில்லி செல்ல வேண்டும் என்ற நிலையில், சனிக்கிழமையன்று, உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும், ரத்த வாந்தி எடுப்பதாகவும் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அத்துடன், மதுரா ஆசிரமத்தில் உள்ளவர்கள், கழிப்பறையோ குடிநீர் வசதியோ இல்லாத ஒரு அறையில்தன்னைப் பூட்டி வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மகன் அருணை உடனடியாக புறப்பட்டு வருமாறும் கூறியுள்ளார். 

சற்றுநேரம் கழித்து, விக்ரமனின் மகன்அருண், தனது தந்தையிடம் தொடர்புகொள்ள முயன்றபோது, ஆசிரமத்தைச் சேர்ந்த ஒருவர், போனை எடுத்து, விக்ரமன் இறந்து விட்டதாக கூறியுள்ளார். அத்து
டன், தில்லி விமான நிலையம் அருகேவந்தால் உடலைப் பெற்றுக் கொள்ளலாம்என்றும் போனில் தெரிவித்துள்ளார்.அதன்படியே, கடந்த ஜூன் 23-ஆம் தேதி தில்லி சென்ற விக்ரமனின் மகன் அருண் விக்ரம், தனது தந்தையின் உடலைப் பெற்றுக்கொண்டு கேரளா கொண்டுவந்துள்ளார். எம்பாமிங் (பதப்படுத்தல்) செய்யப்பட்ட நிலையில், விக்ரமனின் உடல் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.இதனிடையே, தனது தந்தையின் சாவில் மர்மம் இருப்பதாக அருண் விக்ரம்கூறிய குற்றச்சாட்டின் அடிப்படையில், விக்ரமனின் உடலைப் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ள கேரள போலீசார், அவரது மரணம் தொடர்பாக, சிஆர்பிசி பிரிவு 174-இன் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணையைத் துவங்கியுள்ளனர்.
 

;