tamilnadu

img

சீர்குலைக்கப்படும் ஊரக வேலைத் திட்டம்.... 72 சதவிகித வேலைகள் வீழ்ச்சி!

புதுதில்லி:
மகாத்மா காந்தி தேசியஊரக வேலையுறுதித் திட்டத் தின் கீழ் நிறைவேற்றப்படும் வேலைகள் 70 சதவிகிதம் வீழ்ச்சி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வேலை பெறுவோரின் எண்ணிக்கையும் மிகப்பெரிய அளவிற்கு குறைந்துள்ளது.இடதுசாரிகளின் ஆதரவுடன் நடைபெற்ற முதலாவது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில், கொண்டுவரப்பட்டது, மகாத்மா காந்திதேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டமாகும். 

கிராமப்புற வறுமையை ஒழிக்கும் வகையில், ஏழைகளுக்குக் குறைந்தது 100 நாட்கள் வேலைகிடைப்பதை உத்தரவாதம் செய்யும் இந்த திட்டம்,நாட்டின் பொருளாதாரத்திலும், கிராமப்புற மக்களின் வாழ்க்கையிலும் குறிப்பிடத்தக்க மாற்றத்தைஏற்படுத்தியது. ஆனால், மோடி ஆட்சியில் இந்த திட்டத்திற்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை.இந்நிலையில், 2019-20 நிதியாண்டில், நூறுநாள்வேலைத்திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு பெற்றமக்களின் எண்ணிக்கையிலும், வேலைநாட்களிலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள் ளது.அரசுத் தரப்பு புள்ளி விவரங்களின்படி, 2018 - 2019 நிதியாண்டின் ஜனவரி 19 வரையிலான காலத்தில் மொத்தம் 52 லட்சத்து 59 ஆயிரத்து 912 குடும்பங்கள் 100 நாள்வேலையை முடித்திருந்தன. ஆனால், 2020 ஜனவரி 19 வரையில் மொத்தம் 14 லட்சத்து 55 ஆயிரத்து 805குடும்பங்கள் மட்டுமே100 நாள் வேலையை முடித்துள்ளன. இதுகடந்தாண்டை விட 72 சதவிகித வீழ்ச்சியாகும்.

நூறு நாள் வேலைத் திட்டத்தில் இணைந்த குடும்பங்களின் எண்ணிக்கையும் நடப்பாண்டில் 4 கோடியே 81 லட்சமாகக் குறைந்துள்ளது. 2019 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 5 கோடியே 27 லட்சமாக இருந்துள்ளது. அத்துடன், 100 நாள்வேலைத் திட்டத்தில் பதிவு செய்துள்ள 12 கோடியே43 லட்சம் பேர்களில், வெறும் 6.8 கோடிப் பேர் மட்டுமே நடப்பாண்டில் வேலை பெற்றுள்ளனர்.வேலை நாட்களின் எண்ணிக்கை மற்றும் வேலையில் பங்கேற்ற குடும்பங்களின் எண் ணிக்கை குறைந்திருந்தாலும், மறுபுறத்தில் இத்திட்டத்துக்கான செலவுகள் அதிகமாகவே இருந்துள்ளன. அதாவது நடப்பு நிதியாண்டுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ. 61 ஆயிரத்து 452 கோடிதொகையில் 85 சதவிகிதம் அளவு, அதாவது ரூ.52 ஆயிரம் கோடி செலவிடப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.

;