tamilnadu

img

கார்கரே குறித்த பிரக்யாவின் பேச்சு

புதுதில்லி:

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில், என்னைக் கைது செய்ததற்காக, ஹேமந்த் கார்கரேவும் அவரது குடும்பமும் பூண்டோடு அழிய வேண்டும் என்று சாபம் விட்டிருந்தேன்; அதன்படி அந்த ஆண்டே பயங்கரவாதிகளால் கார்கரே கொல்லப்பட்டு விட்டார் என்று போபால் தொகுதி பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் அண்மையில் கூறியிருந்தார். 

நாட்டிற்காக உயிரிழந்த ஒருவரை, தன் சாபம் பழிவாங்கி விட்டது என்று பிரக்யா சிங் கூறியது, கடும் கண்டனத்திற்கு உள்ளானது. பலரும் அவரைக் கண்டித்தனர். இதனால் பயந்துபோன பிரக்யா சிங், தனது கருத்தை திரும்பப் பெற்றுக்கொள்வதாக பின்வாங்கினார்.இதனிடையே, வடக்கு பிராந்திய ராணுவ கமாண்டராக இருந்து ஓய்வுபெற்றவரான டி.எஸ். ஹூடா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “பிரக்யா சிங்கின் கருத்து கண்டிக்கத்தக்கது. ராணுவத்தைச் சேர்ந்தவரோ, காவல்துறையைச் சேர்ந்தவரோ, உயிர்த்தியாகம் செய்த ஒருவரை விமர்சிப்பது சரியல்ல, அவர்களுக்கு நாம் முழு மரியாதை செலுத்த வேண்டும். பிரக்யாவின் பேச்சு அப்படிப்பட்டதாக இல்லை” என்று கண்டித்துள்ளார்.

கடந்த 2016-ஆம் ஆண்டு, காஷ்மீர் மாநிலத்தின் ‘ஊரி’யில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானுக்குள் புகுந்து துல்லியத் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த துல்லியத் தாக்குதலை வடிவமைத்தவர்தான் டி.எஸ். ஹூடா என்பது குறிப்பிடத்தக்கது.

;