tamilnadu

img

பாஜக வேட்பாளர் கவுதம் கம்பீரிடம் 2 வாக்காளர் அடையாள அட்டைகள்

புதுதில்லி:

பாஜக வேட்பாளர் கவுதம் கம்பீரிடம் இரண்டு வாக்காளர் அடையாள அட்டைகள் உள்ளது என்று ஆம் ஆத்மி கட்சி சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் கிழக்கு தில்லி தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார். இந்நிலையில், அவருக்கு எதிராக அத்தொகுதியின் ஆம் ஆத்மி கட்சி

வேட்பாளர் அதிஷி சார்பில் தில்லி திஸ் ஹசாரி நீதிமன்றத்தில் கிரிமினல் புகார் தாக்கல்செய்யப்பட்டுள்ளது.


இதுதொடர்பாக அதிஷி வெளியிட்டுள்ள செய்தியில்,கவுதம் கம்பீர் தில்லியில் இரண்டு இடங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ளார். தில்லியில் ராஜேந்திர நகர், கரோல் பாக் என 2 இடங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளது. இதற்கு ஓராண்டு வரை சிறைத்தண்டனை கிடைக்கும் என்றும், கவுதம் கம்பீரை தகுதியிழப்பு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இதற்கு கம்பீர் தரப்பில் எந்தவொரு மறுப்பும் தெரிவிக்கப்படவில்லை.

;