tamilnadu

img

மழைநீர் சேகரிப்பை மக்கள் கலாச்சாரமாக மாற்றக் கோரிக்கை 

 புதுக்கோட்டை, ஜூலை 26- மழைநீர் சேகரிப்பை மக்கள் கலாச்சாராமாக மாற்ற வேண்டிய அவசியம் உள்ளதாக அப்துல்கலாமின் அறிவி யல் ஆலோசகர் பொன்ராஜ் தெரிவித்தார். புதுக்கோட்டை மரம் அறக்கட்டளை சார்பில் அப்துல் கலாமின் 4-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு புதுகை நகரில் 1001 மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு அவர் பேசியது: மழை நீர் சேகரிப்பை மக்களின் கலாச்சாரமாக மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் இருந்த நீரை உறிஞ்சிய நாம் இப்போது பூமிக்கு அடியில் மீண்டும் தண்ணீரை கொண்டு செல்ல வேண்டிய கட்டா யத்தில் உள்ளோம். எங்கெல்லாம் மழை நீரை சேகரிக்க வாய்ப்புள்ளதோ அங்கெல்லாம் மழை நீர் சேகரிப்பு தொட்டிகளை உருவாக்கி நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த வேண்டும் என்றார்.  விழாவிற்கு ஞானப்பிரகாசம்; தலைமை வகித்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ், மாவட்ட வன அலுவலர் ஆ.ஆனந்த குமார், நகராட்சி ஆணையர் (பொ) ஜீவா சுப்பிரமணியன், ஒய்வு பெற்ற வேளாண்மை இணை இயக்குனர் ஆ.சுப்பையா, மருத்துவர் ராம்தாஸ், அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் ராஜா பேசினர். முன்னதாக மருத்துவர் எட்வின் வரவேற்க, மரம் அறக் கட்டளையின் உறுப்பினர் கண்ணன் நன்றி கூறினார்.

;