tamilnadu

img

ஹோட்டலில் கைப்பற்றப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்

பாட்னா:

பீகாரில், ஒரு ஹோட்டலில் இருந்து மின்னணு வாக்கு எந்திரங்களும், ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களும் கைப்பற்றப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் முசாபர்பூர் உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கும் திங்களன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில் அதேநாளில் முசாபர்பூரில் ஒரு ஹோட்டலில் இருந்து 2 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், ஒரு கட்டுப்பாட்டுக் கருவி, 2 ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.


முசாபர்பூர் துணை ஆட்சியர், இவற்றை மீட்டபோது, அங்கு திரண்ட உள்ளூர்வாசிகள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி நடைபெற்றிருப்பதாகக் கூறி முழக்கங்களை எழுப்பியுள்ளனர்.


ஆனால், தேர்தல் அலுவலரான அவதேஷ் குமார் என்பவர்தான், மின்னணு வாக்கு இயந்திரங்களை ஹோட்டலில் வைத்தவர் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் கருவிகளும், பழுதான மின்னணு வாக்கு இந்திரங்களுக்கு மாற்றாக கொண்டுவரப்பட்டவை என்றும், கார் ஓட்டுநர் வாக்களித்து விட்டு வரும்வரை, அவற்றை அவதேஷ் குமார், ஹோட்டலில் வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.


இருப்பினும் இது விதிமுறைகளுக்கு எதிரான செயல் என்பதால், விளக்கம் கேட்டு தேர்தல் அலுவலருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருப்பதாகவும் விசாரணைக்குப் பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முசாபர்பூர் மாவட்ட ஆட்சியர் அலோக் ரஞ்சன் கோஷ் தெரிவித்துள்ளார்.


;