tamilnadu

img

பீகார் லாரி விபத்து - 9 புலம்பெயர் தொழிலாளர்கள் பலி

பீகார் மாநிலத்தில் பேருந்தும், லாரியும் மோதி விபத்துக்குள்ளானதில், 9 புலம்பெயர் தொழிலாளர்கள் பலியாகி உள்ளனர்.

கோவிட் 19 பரவல் காரணமாக, கடந்த மார்ச் 24 முதல் நாடு முழுவதும் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. தற்போது, 4வது முறையாக மே 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக பொது போக்குவரத்து முடக்கப்பட்ட நிலையில், வேலையிழந்த புலம்பெயர் தொழிலாளர்கள், தங்கள் சொந்த ஊர்களுக்கு நடந்து செல்கின்றனர். சிலர் சரக்கு வாகனங்களில் ஆபத்தான பயணங்களை மேற்கொண்டனர்.  

இந்த நிலையில், பீகார் மாநிலம் பகல்பூர் மாவட்டத்தில் புலம்பெயர் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற லாரியும், பேருந்தும் மோதி விபத்துக்குள்ளானதில், லாரி பள்ளத்தில் கவிழ்ந்தது. லாரியில் பயணித்த 9 புலம்பெயர் தொழிலாளர்கள் பலியாகி உள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். மேலும் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றது.
 

;