பாட்னா, அக்.5- பீகார் மாநிலத்தில் மஹாநந்தா ஆற்றில் 80 பேருடன் சென்ற படகு வியாழக்கிழமையன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதையடுத்து, தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரு கின்றனர். இதில் பீகார் மாநிலத்தின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள கதிஹார் மாவட்டம் மற்றும் மேற்கு வங்க எல்லைப் பகுதியில் அமைந் துள்ள மால்டா மாவட்டப் பகுதி களின் இடையே 4 உடல்கள் வியா ழக்கிழமை மீட்கப்பட்டன. மேலும் 9 பேர் உயிருடன் மீட்கப் பட்டு மால்டா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதை யடுத்து சனிக்கிழமையும் மீட்பு நட வடிக்கைகள் தொடர்ந்தன. இதில், 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இதனால் படகு விபத்தில் உயிரிழந்த வர்களின் எண்ணிக்கை 9-ஆக அதி கரித்தது. இருப்பினும் படகு இன்னும் கண்டறியப்படவில்லை. மேலும் அதில் பயணித்தவர்கள் அதிகம் என்ப தால் இரவு-பகலாக 2-ஆம் நாளாக மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து வரு கின்றன. உயிரிழப்புகளும் அதிக ரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. 40 பேர் மட்டுமே பயணிக்கக் கூடிய படகில் அதன் இரட்டிப்பு எண்ணிக்கையான 80 பேர் வரை பய ணித்ததுதான் விபத்துக்கு காரணம் என முதல்கட்ட விசாரணை நடத்திய போலீசார் கூறியுள்ளனர்.