tamilnadu

img

ஏமாற்றும் வார்த்தை ஜால மத்திய பட்ஜெட்

கே.பாலகிருஷ்ணன் விமர்சனம்

சென்னை, பிப். 1- மத்திய பாஜக அரசு தாக்கல் செய்திருக்கும் பட்ஜெட்டில் கிரமப்புற வளர்ச்சிக்கு எந்த வகையிலும் ஆக்கப்பூர்வமாக உதவிட எதுவும் இல்லை என்றும் நிதி அமைச்சரின் வார்த்தை ஜாலங்கள்தான் அதிகம் இருக்கிறது என்றும்  மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார். இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த ஆண்டு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த முறை முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். ஆனால், கடந்த ஆண்டை விட எந்த முன்னேற்றமும் இல்லாத மிக மோசமான பட்ஜெட்டாக உள்ளது.

பிரதமர் பெயர் திட்டத்துக்கும் நாமம்!

நாடு சந்தித்துக் கொண்டிருக்கும் பொருளாதார மந்தம், வேலையின்மை, தொழில் நசிவு போன்றவற்றிற்கான எந்த ஆக்கப்பூர்வமான திட்டங்களும் இல்லை. அமைச்சர் நிர்மலா சீதாரா மனின் வார்த்தை ஜாலங்கள்தான் அதிகமாக உள்ளன. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், கடந்த ஆண்டு இரண்டாக அறிவித்த திட்டங்களை இந்தாண்டு ஒன்றாக சேர்த்து அறி வித்துள்ளார்கள். உதாரணத்திற்கு, கடந்த முறை விவசாயத்திற்கு 1,60,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இந்த முறை விவசாயம், பாசனத்திற்கும் நிதி என தனித் தனியாக அறிவித்தாலும் கடந்த முறையைவிட இம்முறை வெட்டி குறைக்கப்பட்டுள்ளது. கிராமப்புற வளர்ச்சிக்கு கடந்த ஆண்டு 1.25 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆனால் இந்த பட்ஜெட்டில் ரூ. 1.23 லட்சம்தான் ஒதுக்கீடு செய்திருக்கிறார்கள். கிர மப்புற வளர்ச்சிக்கான நிதி குறைக் கப்பட்டுள்ளது. பிரதமரின் தூய்மை திட்டத்திற்கு கடந்த ஆண்டு ரூ. 12,600 கோடி ஒதுக்கீனார்கள். இம்முறை ரூ.12,300 கோடியாக குறைகப்பட் டுள்ளது. பிரதமரின் பெயரில் உள்ள திட்டத்திற்கே இதுதான் நிலைமை.

தனியார் மயம்...

தனியார்மயம்தான் இந்த பட்ஜெட்டில் கூடுதலாக வலியுறுத்தப் பட்டுள்ளது. இந்தியாவின் பொருளா தாரத்திற்கு மிகவும் பின்புலமாக இருக்கக் கூடிய எல்.ஐ.சி பங்குகளை விற்கப்போகிறோம் என்று அறி வித்துள்ளார்கள். தனியார்மயம் தாராள மயம் என்பதுதான் இந்த பட்ஜெட்டி னுடைய உயிர்மூச்சாக உள்ளது. எல்.ஐசி கடந்த 70 ஆண்டுகளில் நாட்டி னுடைய வளர்ச்சிக்கு, பொருளாதாரத் திற்கு பெரும் பங்காற்றியுள்ளது. இது அரசுடைமை மீது நடத்தப்பட்டுள்ள மிகப்பெரிய தாக்குதலாகும். புதிதாக 150 ரயிகள் தனியார் பங்களிப்புடன் இயக்கப் போவதாக அறிவித்துள் ளார்கள். 

காவி மயமாகும் கல்வி!

புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தப் போகிறோம் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கை மூலம் புதிய கல்வி நிலையங்கள் வருவதற்கு, வெளிநாடு களில் உள்ள வங்கிகளில் கடன் வாங்கு வது மட்டுமல்லாமல், வெளிநாட்டு பல்கலைக் கழகங்களையும் தாராளமாக அனுமதிக்கப் போகிறோம் என்று கூறப்பட்டுள்ளது.

போகாத ஊருக்கு வழி....

மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. எங்கே உயர்ந்திருக்கிறது? 15 லட்சம் கோடி ரூபாய் விவசாயிகளுக்கு கடன் வழங்கப் போகிறோம் என்கிறார்கள். கடன் வாங்கினால் அந்த கடனை விவசாயிகள் திரும்ப அடைக்கப் போகிறார்கள். கிராமப்புற மக்களின் வருமானத்தை உயர்த்துவதற்கான எந்த திட்டங்களும் இல்லை. கிரமப்புற மக்களின் வாங்கும் சக்தியை உயர்த்த வேண்டும். தொழிலாளர்கள் குறைந்தபட்ச ஊதியம் 20 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதற்கான எந்த திட்டமும் இல்லை. விவசாய விளை பொருட்களுக்கு கட்டுப்படி யான விலை, கடன் தள்ளு படி, வட்டி தள்ளுபடி குறித்த எந்த அறி விப்பும் இல்லை. இன்றைய பொருளா தார நெருக்கடிக்கு, தொழில் மந்த நிலைக்கு உதவக் கூடிய ஆக்கப்பூர்வ மான பட்ஜெட்டாக இல்லை.

யார் பலசாலி?

செல்வத்தை  உருவாக்குபவர்களை பாதுகாப்போம், சலுகைகள் வழங்குவோம் என்று கூறப்பட்டுள்ளது. செல்வத்தை  உருவாக்கு பவர்கள் யார்? வளத்தை உற்பத்தி செய்யக் கூடிய வர்கள்தான் செல்வத்தை  உருவாக்கு பவர்கள். ஆனால் அவர்களைப் பொருத்த வரை அதானியும், அம்பானி யும்தான் செல்வத்தை  உருவாக்கு பவர்கள்.  வருமான வரி கூட ரூ. 5 லட்சத்திற்கு கீழ் உள்ளவர்களுக்கு வரு மான வரி இல்லை என்று அறிவிக்கப் பட்டுள்ளது. ரூ. 15 லட்சத்திற்கு மேல் அதிகமாக லாபம் ஈட்டக் கூடிய  பெரு முதலாளிகளுக்கு ஏன் புதிய வரி, கூடுதல் வரி, விதிக்கவில்லை. ஆக்ஸ்பாம் அமைப்பு சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில்,“ இந்தியாவில் உலகப் பெரும் பணக்காரர்கள் வேகமாக வளர்ந்து வருகிறார்கள். 70 விழுக்காடு இந்திய மக்களின் சொத்தை ஒரு சில பெரும் பணக்காரர்கள்வைத் துள்ளனர்” என தெரிவித்திருந்தது. கொள்ளை லாபம் ஈட்டும் கார்ப்பரேட் நிறுவனங்கள், பெரு முதலாளிகளின் நிறுவனங்கள் மீது வரி விதித்து அதை ஏழை எளிய மக்களுக்கு பயன்படுத்துவதாக இருந்தால்தான் அது ஆக்கப்பூர்வமான பட்ஜெட்டாகும். மாறாக அவர்களுக்கு சலுகைகளை வழங்கி மக்களுக்கு எந்த நிவாரணமும் இல்லாத பட்ஜெட்டாக உள்ளது. இது ஏமாற்றமளிக்கக் கூடிய, வார்த்தை ஜாலங்கள் நிறைந்த பட்ஜெட்டாக உள்ளது. இவ்வாறு பாலகிருஷ்ணன் கூறினார். இந்த சந்திப்பின்போது மாநிலக்குழு உறுப்பினர்கள் ஆறுமுகநயினார், க.உதயகுமார் ஆகியோர் உடனிருந்த னர்.





 

;