tamilnadu

img

ரூ. 263 கோடியில் பாஜக கூட்டணி அரசு ஊழல்? 8 ஆண்டுகளாக கட்டிய பாலம் திறந்த ஒரே மாதத்தில் இடிந்தது!

பாட்னா:
ஐக்கிய ஜனதாதளம் - பாஜக கூட்டணி ஆட்சி நடக்கும் பீகாரில், முதல்வர் நிதிஷ் குமார் திறந்து வைத்த ஆற்றுப் பாலத்தின் ஒரு பகுதி, ஒரே மாதத்தில் இடிந்து விழுந்துள்ளது.கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழை காரணமாக, பீகார் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் சாலைகள் மற்றும் சிறிய பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இந்நிலையில், கோபால்கஞ்ச் மாவட்டத்தின் காங்டாக் ஆற்றின் குறுக்கே ரூ. 263 கோடியே 47 லட்சம் செலவில் கட்டப்பட்டு- முதல்வர் நிதீஷ் குமாரால் திறந்து ஒருமாதம் மட்டுமே ஆன புத்தம் புதிய சத்தர்காட் பாலமும் இடிந்து சேதம் அடைந்துள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.பாட்னாவில் இருந்து 150 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள 1.4 கி.மீ. நீளத்திற்கான இந்த பாலம் 8 ஆண்டுகளாக கட்டப்பட்டு வந்தது. தேர்தல் வரவிருப்பதையொட்டி, கடந்த ஜூன் 16 அன்றுதான் முதல்வர் நிதீஷ்குமார் பாலத்தைத் திறந்து வைத்தார்.

ஆனால், ஒரே மாதத்திற்குள், தற்போதைய வெள்ளப்பெருக்கில், பாலத்தையும் சாலையை இணைக்கும் இடத்தில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. பாலத்தை தாங்கி நிற்கும் தூண்கள் வலுவாக இல்லாததாதே, உடைப்புக்கு காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில், ஐக்கிய ஜனதாதளம் - பாஜக கூட்டணி அரசு, தங்களின் ஊழல் முறைகேட்டை மறைக்க, தயவுசெய்து எலியை காரணம் காட்டி விட வேண்டாம் என்று எதிர்க்கட்சிகள் கிண்டலாக கூறியுள்ளனர்.

;