tamilnadu

img

விநாயகரும், முருகனும் பாஜகவின் வாக்கு சேகரிக்கும் முகவர்களா? - கே.பாலகிருஷ்ணன்

கொரோனா தொற்று நோய் பரவாமல் தடுக்க ஊர டங்கு பல மாதங்களாக நீடித்து வருகிறது. இதனால் பொதுப்போக்கு வரத்து, திரையரங்குகள், கோவில்கள், சுற்றுலா மையங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் மக்கள் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு செயல் படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலை யில் ஏற்கனவே பல திருவிழாக்களும், கோவில் வழிபாட்டு நிகழ்வுகளும் நடத்த அனுமதிக்கப்பட வில்லை. இதே அடிப்படையில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி அவரவர் வீடுகளில் விநாயகர் சிலையை வைத்து வழிபடவும், தனிப்பட்ட முறையில் நீர்நிலைகளில் சிலைக ளை கரைக்கவும் செய்யலாம் எனவும், அதே சமயம் பொது இடங்களில் விநாயகர் சிலை வைப்பது, ஊர்வலமாக சென்று நீர்நிலைகளில் கரைப்பது போன்ற நிகழ்வுகளை தடை செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. கொரோனா என்கிற இந்த கொடும் நோய் பரவுவதை தடுக்கும் வகை யிலேயே இந்த உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது. இதை ஏற்றுக் கொண்டு தமிழகம் முழுவதும் மக்கள் விநாயகர் சதுர்த்தி விழாவை அமைதி யான முறையில் வழிபாடு நடத்தியுள்ளனர்.

பதற்றத்தை உருவாக்கும் இந்து முன்னணி, சங்பரிவார்

ஆனால் இதை ஏற்றுக் கொள்ள மறுத்த இந்து முன்னணி, பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ்.  சங்பரிவார் அமைப்புகள் விநாயகர் வழிபாட்டை பயன்படுத்தி தமிழகத்தில் ஒரு பதற்றத்தை உரு வாக்கும் நோக்கோடு தடை உத்தரவை எதிர்த்து ஒன்றரை லட்சம் இடங்களில் நாங்கள் சிலைக ளை வைப்போம், ஊர்வலமாக சென்று கரைப் போம் என கூறினர். பகிரங்கமாக இந்து முன்ன ணியினர் சவால் விட்டனர். இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் வழக்குத் தொடுக்கப்பட்டு நீதி மன்றங்களும் தமிழக அரசு உத்தரவு நியாய மானது என்றும், அரசின் வேண்டுகோள்படி அவரவர் வீடுகளிலேயே விநாயகர் வழிபாட்டை நடத்த வேண்டுமென தீர்ப்பளித்துள்ளன. சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த பின்ன ரும் அதை ஏற்க மறுத்து இந்துத்துவா கூட்டத்தைச் சார்ந்தவர்கள் விநாயகர் சிலையை பல பொது இடங்களிலும், தனியாருக்குச் சொந்தமான இடங்களிலும் வைத்து கூட்டமாக நின்று வழி படுவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர். இதை தடுக்க முயன்ற காவல்துறையின ருடன் இந்து முன்னணியைச் சார்ந்தவர்கள் தள்ளு முள்ளு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

கொரோனா காலத்திலும் அரசியல்  செய்யும் பாஜக

கடந்த சில ஆண்டுகளில் தடை உத்தரவு ஏதும் இல்லாத சூழ்நிலையில் விநாயகர் சதுர்த்தி விழாவை பயன்படுத்தி தமிழகத்தின் பல பகுதிக ளில் மத மோதல்களை உருவாக்கி கலவரங்க ளை நடத்திய வரலாறு இவர்களுக்கு உண்டு என்பது தெரிந்ததே. அதேபோன்று தேர்தல் நெருங்குகிற நேரத்தில் விநாயகரைப் பயன் படுத்தி மத பதற்றத்தை உருவாக்குவது, சிறு பான்மை மக்களை அச்சுறுத்துவது போன்ற காரி யங்களில் ஈடுபடும் நோக்கோடு இந்துத்துவா சக்தியினர் இக்காரியங்களை மேற்கொண்டு வரு கின்றனர். அதிலும் கொரோனா என்கிற மோச மான நோய் பரவியுள்ள சூழ்நிலையிலும் கூட இந்த நோய் பரவலால் சாதாரண மக்கள் பெருமளவில் பாதிக்கும் வாய்ப்புள்ள சூழ்நிலை யிலும், இதையெல்லாம் புறந்தள்ளிவிட்டு விநா யகர் சதுர்த்தி விழாவை நடத்துவது என்பது இவர்க ளுக்கு விநாயகர் மீதான அக்கறையினால் அல்ல; மாறாக, இதைப் பயன்படுத்தி தமிழ் நாட்டில் தங்களது அரசியல் செல்வாக்கை உயர்த்திக் கொள்ளும் நோக்கோடு இக்காரி யங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதேபோல கடந்த சில நாட்களுக்கு முன்னர் கந்த சஷ்டி கவசத்தை விமர்சித்து கருப்பர் கூட்டம் வெளியிட்டி ருந்த வீடியோவை பயன்படுத்தி தமிழகத்தில் பதற்றமான சூழ்நிலையை உருவாக்கியதையும் கவனத்தில் கொள்ள வேண்டியதாகும். கருப்பர் கூட்டம் வெளியிட்ட யூ டியூப் வீடியோ சில மாதங்களுக்கு முன்னரே வலைதளத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அதை தேடி கண்டுபிடித்து பாஜகவினர் முருகப் பெரு மானை அவமானப்படுத்தி விட்டதாக பெரும் பதற்றத்தை உருவாக்கினார்கள். தமிழக காவல் துறையினரும் பாஜகவினர் அளித்த புகாரை பயன்படுத்தி சம்பந்தப்பட்ட கருப்பர் கூட்டத்தின் முக்கியமானவர்களை கைது செய்தது மட்டு மின்றி, அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ததோடு, கருப்பர்கள் கூட்டம் வைத்திருந்த 500க்கும் மேற்பட்ட வீடியோக்களை நீக்கியதோடு, அவர்களின் அலுவலகத்தையும் சீல் வைக்கும் நடவடிக்கைகளையும் மேற்கொண் டது. தமிழக அரசின் இத்தகைய கண்மூடித்தன மான நடவடிக்கை பாஜகவினரை மேலும் உற்சா கப்படுத்தி தாங்கள் தமிழகத்தில் எதையும் செய்யலாம் என்ற எண்ணத்தை உருவாக்கிய தன் விளைவே, இன்றைக்கு தமிழக அரசின் தடை உத்தரவையும், உயர்நீதிமன்ற தீர்ப்புகளையும் எதிர்த்து சிலைகளை வைத்து விழா நடத்துவ தற்கான வாய்ப்பினை உருவாக்கியுள்ளது.

கந்த சஷ்டி கவச வீடியோவில் குறிப்பிடப் பட்டுள்ள கருத்துக்கள் அனைவருக்கும் உடன்பா டானதல்ல என்பது அறிந்ததே. சாதாரண மக்க ளின் இறை நம்பிக்கையை கொச்சைப் படுத்துவ தாக விமர்சனங்கள் அமைவது நல்லதல்ல. ஆனால், அதேசமயம் இறை நம்பிக்கை உள்ள வர்களுக்கு வழிபாட்டு உரிமை எப்படி அடிப்படை யான உரிமையோ, அதேபோல இறை நம்பிக்கை யில்லாதவர்கள் கடவுள் மறுப்பு கொள்கையை வெளிப்படுத்துவதும் அரசியல் சட்டம் வழங்கி யுள்ள அடிப்படை உரிமையாகும். இதையெல்லாம் பொருட்படுத்தாமல் பாஜக வினர் மிரட்டுகிறார்கள் என்பதற்காக தமிழக அரசும், காவல்துறையும் அவர்களுக்கு அடி பணிந்து கருப்பர் கூட்டத்தின் மீது மேற்கொள் ளப்பட்ட அதீத நடவடிக்கையே விநாயகர் சதுர்த்தி விழாவின் போது தமிழகத்தில் பதற்றமான நிலை மையை உருவாக்க பாஜகவினருக்கு தைரியம் அளித் துள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடும் விசயத்தில் தமிழக அரசு மேற்கொண்டுள்ள இதே அணுகுமுறையினை பாஜகவினர் மீது கடந்த காலங்களில் தமிழக அரசும், காவல்துறையும் மேற்கொண்டிருக்குமானால் இத்தகைய பதற்ற மான நிலைமை ஏற்பட வாய்ப்பு உருவாகியி ருக்காது.

மக்கள் பிரச்சனைகளிலிருந்து திசை திருப்பல்

தமிழ்நாட்டில் கொரோனா தொற்றினால் 3.5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள னர். 6500 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் தொற்று பரவி மக்கள் உயிருக்கு அஞ்சி வாழும் நிலைமை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அறி விக்கப்பட்டு வரும் ஊரடங்கு மற்றும் பொது முடக் கத்தால் அன்றாட வாழ்க்கை பெரும் பாதிப்புக் குள்ளாகியுள்ளது. வேலையிழப்பு, வருமான இழப்பு போன்றவையினால் மக்களின் வாழ்வா தாரம் நொறுங்கிப் போயுள்ளது என பல ஆய்வு கள் பட்டியலிட்டுக் கொண்டுள்ளன. வீட்டு வாடகை  கொடுக்க முடியாமல், வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாமல், இ.எம்.ஐ. செலுத்த முடியா மல் அன்றாட வாழ்வுக்கு வழிதெரியாமல் மக்கள் திகைத்துக் கொண்டுள்ளனர். மத்தியில் உள்ள மோடி அரசும், மாநிலத்தில் உள்ள எடப்பாடி அரசும் நாசமடைந்து வரும் மக்களின் வாழ்வா தாரத்தை காப்பாற்றுவதற்கு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. 

ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம் ரூ. 7500 வழங்க வேண்டும்; மத்திய கிடங்குகளில் குவிந்து  கிடக்கும் அரிசி உள்ளிட்ட உணவு தானியங்க ளை இலவசமாக மக்களுக்கு விநியோகிக்க வேண்டும், கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு மாநிலங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் போன்ற எந்த கோரிக்கையையும் மோடி அரசு செவிமடுக்க மறுத்து வருகிறது. மாநி லத்தில் உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனி சாமி அரசும், ஆரம்பத்தில் ஒரு குடும்பத்திற்கு ரூ. 1000 வழங்கிவிட்டு அத்தோடு நிவாரணப் பணிகளை முடித்துக் கொண்டுவிட்டது. விலையில்லாமல் வழங்கப்பட்ட சர்க்கரை, பருப்பு, எண்ணெய் போன்ற பொருட்களை கூட இனி பணம் கொடுத்துத்தான் வாங்க வேண்டு மென உத்தரவினை வெளியிட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகளின் இத்தகைய நடவடிக்கையி னால் மக்கள் வாழ்வது அறியாது தவித்துக் கொண்டுள்ள இந்த சூழ்நிலையில், மக்களின் அடிப்படை பிரச்சனைகளிலிருந்து திசை திருப்ப வும், அடுத்து வரும் தேர்தலில் தங்களுக்கு தமிழ்நாட்டில் ஒரு அடித்தளம் அமைக்க வேண்டு மென்ற குறுகிய நோக்கோடு விநாயகரையும், முருகப்பெருமானையும் பாஜக வாக்கு சேக ரிக்கும் முகவர்களாக பயன்படுத்துவது வன்மையான கண்டனத்திற்குரியதாகும். கிடக்கிறது கிடக்கட்டும், கிழவனைத் தூக்கி மனையில் வை என்பது போன்ற அணுகுமுறை யினை தமிழ்நாட்டு மக்கள் ஒரு போதும் ஏற்க மாட்டார்கள்.


 

;