சண்டிகர், ஆக.1- பஞ்சாபின் மூன்று மாவட்டங்களில் நடந்த ஹூச் சோகத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளது. கடந்த மூன்று நாட்களில் பஞ்சாபின் மூன்று மாவட்டங்களில் விஷ மது குடித்து 65 பேர் பலியாகியுள்ளனர், இதில் டார்ன் தரனில் 42 பேர், அமிர்தசரஸ் கிராமப்புறத் தில் 12 பேர், குர்தாஸ்பூரின் படாலாவில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். டார்ன் தரனில் இதுவரை 42 பேர் இறந்துள்ளதாக டார்ன் தரன் துணை ஆணையர் குல்வந்த் சிங் கூறினார். இதற்கி டையில், குர்தாஸ்பூர் துணை ஆணையர் முகமது இஷ்பாக் போலி மது அருந்தி யதாகக் கூறப்படுபவர்களில் 11 பேர் படாலா நகரைச் சேர்ந்தவர்கள் எனக் கூறியுள்ளார். போலி மது குடித்து உயிரிழந்தத சம்ப வத்தில் அமிர்தசரஸைச் சேர்ந்த பால்விந்தர் கவுர், மிது, தர்ஷன் ராணி, ராஜன், தர்ன் தரனைச் சேர்ந்த காஷ்மீர் சிங், ஆங்ரேஸ் சிங், அமர்ஜித் மற்றும் பால்ஜித் ஆகி யோரை காவல்துறையினர் கைது செய் துள்ளனர், குற்றம் சாட்டப்பட்டவர்களிட மிருந்து ஏராளமான போலி மதுபானம், டிரம்கள், சேமிப்புக் கேன்கள் ஆகிய வற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்து இரசாயன பகுப்பாய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளன.