tamilnadu

img

மேகாலயா மாநிலத்தில் நுழைய பதிவு செய்வது கட்டாயம்

ஷில்லாங், நவ.3- மேகாலயா மாநிலத்தில் ஒரு நாளுக்கு மேல் தங்க பதிவு செய்வது கட்டாயமாகி றது. இதுகுறித்து சட்டம் கொண்டுவர அம் மாநில அரசு நடவடிக்கை மேற்கொண் டுள்ளது.  பழங்குடியினரின் பாதுகாப்புக்காக மேகாலயா குடியிருப்போர் பாதுகாப்பு மற்றும் காவல் சட்டம் 2016 (எம்ஆர்எஸ்எஸ்) திருத்தம் செய்வதற்கான திட்டத்துக்கு அம் மாநில அமைச்சரவை வெள்ளியன்று ஒப்பு தல் அளித்துள்ளதாக துணை முதல்வர் பிரஸ்டன் டிங்சாங் கூறினார். சட்டமன்றத்தின் அடுத்த கூட்டத்தில் இந்த மசோதா சட்ட மாக்கப்படும் எனவும், உடனடியாக அது அம லுக்கு வரும் எனவும் அவர் கூறினார். மாநிலத்தின் பல்வேறு பகுதியினருடனும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனும் அர சின் பல்வேறு துறையினரிடமும் நடத்திய ஆலோசனையின்படி இந்த முடிவு மேற் கொள்ளப்பட்டுள்ளது. மேகாலயாவுக்கு வெளியில் உள்ளவர்கள் யாராக இருந்தா லும் 24 மணி நேரத்துக்கு மேல் மாநிலத்தில் தங்க வேண்டும் என்றால் அரசுக்கு ஆவ ணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். மத்திய, மாநில, மாவட்டக் கவுன்சில் ஊழியர்கள் இந்த சட்ட வரம்புக்குள் வரமாட்டார்கள்.  தற்போதுள்ள சட்டம் திருத்தப்பட்டு பதிவு செயல்முறை எளிமைப்படுத்தப்பட்டு ஆன்லைன் முறை அறிமுகப்படுத்தப்படும். பொய்யான ஆவணங்கள் சமர்ப்பித்து தங்கி னால் கடுமையான தண்டனை கிடைக்கும் என வும் அவர் கூறினார்.

;