tamilnadu

உதகை: நீர்வீழ்ச்சியில் பலியானோரின் உடல்கள் மீட்பு

உதகை, ஜன. 28- உதகை கல்லட்டி நீர்வீழ்ச்சியில் பலி யான இருவரின் சடலங்கள் 3 நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்டது.  நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத்  தலங்களில் முக்கியமான ஒன்று கல்லட்டி  நீர்வீழ்ச்சி. இந்த நீர்வீழ்ச்சியை கண்டு களிக்க ஆண்டுதோறும் ஏராளமான சுற் றுலா பயணிகள் மட்டுமல்லாமல் உள்ளூர் மக்களும் சென்று வருகின்றனர். இந்நிலையில் நீலகிரி மாவட்டம் உதகை ஏடிசி அருகே உள்ள விக்டோரியா ஹால் பகுதியைச் சேர்ந்தவர் சாமுவேல், சுந்தர்ராஜ் மற்றும் இவர்களின் நண்பர் களான ஆனந்த், விஜயகுமார், கணேசன்,  ஜிப்சன், பரத் ஆகிய 7 பேரும் கடந்த ஞாயி றன்று (ஜன.26) கல்லட்டி நீர்வீழ்ச்சிக்கு சென்றனர். அங்கு சாமுவேலும், கணே சனும் குளித்து கொண்டிருந்தனர். அப் போது எதிர்பாராத விதமாக சாமுவேல் (23) ஆற்றல் மூழ்கினர். இந்நிலையில் அவரை காப்பாற்ற  முயன்ற அவரது நண்பர் கணேசனும் (25) ஆற்றில் மூழ்கினார். இதனைக் கண்டு பதறிப்போன  மற்ற நண் பர்கள்   தீயணைப்பு துறையினர் மற்றும்  புது மந்து போலீசாருக்கு தகவல் தெரி வித்தனர்.  இதனை தொடர்ந்து சம்பவ இடத் திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறை யினர் இருவரின் உடல்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆழமான பகுதி என்பதால் இருவரின் உடல் கிடைப்பதில் தாமதமானது. தொடர்ந்து தேடும் பணி  நடைபெற்றது. இந்நிலையில், வெளி மாவட் டத்திலிருந்து அழைத்து வரப்பட்ட பேரிடர் மீட்பு குழுவினர் இரண்டு நாட்களுக்கு பிறகு  செவ்வாயன்று உடல்களை மீட்டனர். பிரேதங்கள் உடற்கூராய்விற்கு உதகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக் கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து புதுமந்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

;