tamilnadu

img

கடல் நீர்மட்டம் அதிகரிப்பால் பாதிக்கப்படக்கூடிய நாடுகளில் இந்தியா

கடல் நீர்மட்டம் அதிகரித்து வரும் காரணமாக, கடுமையாக பாதிக்கப்படக்கூடிய தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இந்தியா இருப்பதாக ஐநா பொதுச்செயலாளர் அண்டோனியோ கவலை குட்ரஸ் தெரிவித்துள்ளார்.

தாய்லாந்தில் உள்ள பாங்காக் நகரத்தில் 35-வது தென் கிழக்கு ஆசிய நாடுகளின் உச்சி மாநாட்டு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்ற ஐ.நா பொதுச்செயலாளர் ஆன்டோனியோ குட்ரஸ் பருவநிலை மாற்றம் காரணமாக ஏற்படும் பாதிப்பு குறித்து கவலை தெரிவித்தார். இது குறித்து அவர் கூறுகையில், ”பருவநிலை மாற்றாம் காரணமாக எப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது கடல் மட்டம் வேகமாக அதிகரித்து வருகிறது. சமீபத்தில்  இது குறித்து ’கிளைமேட் சென்ட்ரல்’ எனும் பருவ நிலை மாற்றம் குறித்து ஆய்வு செய்யும் அமைப்பும் அறிக்கை வெளியிட்டுள்ளது.

பூமியின் வெப்பம் 1.5 டிகிரி செல்சியஸுக்கு அதிகமாக போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். வரும் 2050-ஆம் ஆண்டுக்குள் 45 சதவீத  அளவுக்கு கரியமில வாயு கட்டுப்படுத்தப்பட வேண்டும். நிலக்கரியை பயன்படுத்தும் அனல் மின் நிலையங்களின் பயன்பாட்டை முடிவுக்குக் கொண்டு வர வேண்டியது மிகவும் அவசியம். புதிதாக அனல் மின் நிலையங்கள் அமையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். புவி வெப்பமயமாவதால், தென் கிழக்கு ஆசிய நாடுகளில் இந்தியா, சீனா, ஜப்பான், வங்கதேசம் ஆகிய நாடுகள் கடுமையாக பாதிக்கப்படும். மேலும், தாய்லாந்தில் 10 சதவீத மக்கள் வசிக்கும் பகுதிகள் கடலுக்குள் மூழ்கும் அபாயம் உள்ளது” என்று கூறினார்.
 

;