tamilnadu

img

சனிக்கு மேலும் 20 புதிய நிலவுகள்

கேப் கேனவெரல்:
சனி கிரகத்தைச்  சுற்றி  இருபது  புதிய நிலவுகள் (துணைக் கோள்கள்) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.  இதன் மூலம்  வளைய கிரகமான சனி கிரகத்திற்கு மொத்தம் 82  நிலவுகள் உள்ளன என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். தற்போது சூரிய குடும்பத்தில் அதிக நிலவுகள் உள்ள  கிரகமாக சனிக்கிரகம் உள்ளது. இதுவரை வியாழனுக்கு  79 நிலவுகள் இருந்தன.  கார்னெகி இன்ஸ்டிடியூஷன் பார் சயின்ஸ்  நிறுவனத்தின் வானியலாளர்  ஷெப்பர்டும் அவரது குழுவும்  ஹவாய் தீவில்  ஒரு  நவீன தொலைநோக்கியைப் பயன்படுத்தி சனி கிரகத்தின் புதிய நிலவுகளைக் கண்டுபிடித்துள்ளனர். 

 சனி கிரகத்தைச் சுற்றி 5 கிலோமீட்டர் மற்றும் வியாழனைச் சுற்றி 1.6 கிலோ மீட்டர்  விட்டம் உடைய சிறியதாக இருக்கும் நிலவுகளின் பட்டியலை வானியலாளர்கள் வைத்துள்ளனர். இந்த  சிறிய நிலவுகளை ஆராய எதிர்காலத்தில்  பெரிய தொலைநோக்கிகள் தேவைப்படும் என்று ஷெப்பர்ட்டின் கூறியுள்ளார்.வானியலாளர் ஸ்காட் ஷெப்பர்ட்  கூறுகையில், “சனிக்கிரகம்  உண்மையான நிலவுகளின்  ராஜா என்பதைக் கண்டுபிடித்தது வேடிக்கையாக இருந்தது.  சுமார் 100 டைனியர் நிலவுகள் கூட சனியைச் சுற்றி வருகின்றன, அவை இன்னும் கண்டுபிடிக்கப்பட காத்திருக்கின்றன.வியாழன் கிரகத்தை விட சனியைச் சுற்றி உள்ள  நிலவுகளைக் கண்டுபிடிப்பது மிக கடினம். ஏனெனில் சனிகிரகம்  அவ்வளவு தூரம்   உள்ளது. இந்த நிலவுகள், கிரகங்களை உருவாக்க உதவிய பொருட்களின் எச்சங்கள் ஆகும்.  எனவே அவற்றைப் பற்றி ஆய்வு செய்வதன்  மூலம், கிரகங்கள் எதில் இருந்து உருவாகின  என்பதைப் பற்றி அறிந்துகொள்ளலாம்”  என்று தெரிவித்தார்.