tamilnadu

img

சாலையை சீரமைக்க கோரி மக்கள் மறியல்

தரங்கம்பாடி, டிச.3- நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் சேதம டைந்து குண்டும், குழியுமாக உள்ள சாலையை சீர மைக்க வலியுறுத்தி செவ்வாயன்று பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தரங்கம்பாடி சாலையில் பாதாள சாக்கடை திட்டத்தால் ஏராளமான பள்ளங்கள் ஏற்பட்டுள்ள தால் தற்காலிகமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டு. மாற்று பாதையாக தருமபுரம் சாலையை கனரக வாகனங்கள் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக பயன்படுத்தி வருகின்றன.  இதனால் சாலை குண்டும், குழியுமாக மாறி நடந்து கூட செல்ல முடியாத நிலையில் உள்ளதால்  இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். இச்சாலையை செப்பனிட கோரி அப்பகுதி மக்கள் பலமுறை நகராட்சி நிர்வா கத்திடம் புகார் அளித்தும், நகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியும் நடவ டிக்கை இல்லை.  இதைதொடர்ந்து பொதுமக்கள் லால்பகதூர் நகரில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த மயிலாடுதுறை துணை காவல் கண்காணிப்பா ளர் அண்ணாதுரை, காவல் ஆய்வாளர் சிங்கார வேலு மற்றும் நகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை யில் ஈடுபட்டனர். உடனடியாக கற்கள் கொட்டி தற் காலிகமாக சீரமைக்கப்படும் என்ற உறுதிமொழி அளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப் பட்டது. இனியும் அதிகாரிகள் அலட்சியம் காட்டினால் போராட்டம் தொடரும் என மக்கள் தெரிவித்தனர்.

;