tamilnadu

img

மேலப்பாளையம் சாலையில் விபத்து ஏற்படுத்தும் வகையில் வளர்ந்துள்ள கருவேல முட்செடிகள்

 சீர்காழி அக்.31- சீர்காழி அருகே மேலப்பாளையம் கிராமத்திலிருந்து திருநகரி செல்லும் சாலையில் 1.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலையின் இருபுறங்களிலும் சீமைக்கருவேல முட்செடிகள் அடைத்துக் கொண்டு வளர்ந்துள்ளது.  இதனால் சாலையில் செல்லும் பொதுமக்களின், விவசாயிகள் மற்றும் பள்ளி மாணவர்கள் அவதியடைகின்றனர்.காயம் ஏற்படுகிறது. இரவு நேரங்களில் சாலையில் நடந்து கூட வர முடியாத நிலை ஏற்படுகிறது. கருவேல முட்செடிகள் சாலையின் நடுப்பகுதி வரை நீட்டிக் கொண்டிருப்பதால் சாலையின் நடுவே நடமாட முடியாமல் அனைத்து தரப்பினரும் அவதியடைகின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி மேலப்பாளையம் கிராமத்திலிருந்து திருநகரிக்குச் செல்லும் சாலையின் இருபுறங்களிலும் அடர்ந்து வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.