tamilnadu

img

அதிகாரிகள் கண்காணிப்பையும் மீறி  கொள்ளிடம் ஆற்றில் மணல் கடத்தல்  

சீர்காழி, ஜூன் 3-நாகை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றிலிருந்து மணல்திருட்டு நடைபெறுவதை தடுக்கும் முயற்சியில் அதிகாரிகள்மற்றும் காவல்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். ஆனால் இதையும் மீறி நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களில் சிலர் மணல் திருடி விற்பனை செய்து வருகின்றனர்.இந்நிலையில் சம்பவத்தன்று இரவு கொள்ளிடம் ஆற்றிலிருந்து ஒரு மாட்டு வண்டி மூலம் கொள்ளிடம் ரயில் பாலம்அருகே மணல் கடத்தி வந்த போது மாட்டு வண்டியின் அச்சுதிடீரென முறிந்ததால் வண்டி ஒரு புறமாக சாய்ந்ததில் மணலும் கீழே கொட்டியது. வண்டியை ஓட்டி வந்த மர்மநபர்தப்பித்தால் போதும் என்று வண்டியை போட்டு விட்டு மாடுகளுடன் ஓடி விட்டார். இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொன்னக்காட்டுபடுகை, கீரங்குடி, மாதிரவேளுர், பாலுரான்படுகை உள்ளிட்ட கிராமங்களில் கொள்ளிடம் ஆற்றிலிருந்து தொடர்ந்து நள்ளிரவு நேரங்களில் மணல் கடத்தப்படுவதை தடுக்கும் வகையில் வருவாய்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கொண்ட குழு அமைத்து கண்காணிக்க வேண்டும் என்று கரையோர கிராமமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

;