tamilnadu

இலவச கோழிக்குஞ்சு வழங்கியதில் முறைகேடு: அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

சீர்காழி ஜூலை 25- கொள்ளிடம் பகுதியில் கால்நடை துறை சார்பில் 200 பேருக்கு 10 ஆயிரம் கோழிக்குஞ்சு, மானிய விலையில் வழங்கியதில் முறைகேடு நடந்ததில் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியத்தில் உள்ள 42 ஊராட்சிகள் உள்ளன. இதில் சாமியம், எடமணல், மாதானம், முதலைமேடு ஆகிய 4 இடங்களில் கால்நடை மருத்து வமனைகள் உள்ளன. இந்த 4 கால்நடை மருத்துவமனைகளை நம்பியே 42 ஊராட்சிகளில் உள்ள 200 கிராம ங்களை சேர்ந்த கால்நடைகள் மரு த்துவ உதவி பெற்று வருகின்றன.  ஆனால் கால்நடை மருத்துவ மனைகள் மூலம் கால்நடைகள் மற்றும் ஆடு,கோழி,நாய் உள்ளிட்ட உயி ரினங்களுக்கு அரசின் மருத்துவ உதவி மற்றும் நிவாரண உதவிகள் குறித்த எந்த விபரமும் தெரிய ப்படுத்துவதில்லை. ஆடு,மாடுகள், குறித்தும், அவற்றிற்கான காப்பீடு குறித்தும் கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கு தெரிவிக்க ப்படுவதில்லை. கால்நடைத்துறை சார்பில் விவசாயிகளுக்கு அரசால் பல  சலுகைகள் அளிக்கப்பட்டாலும் எந்த உதவியும் விவசாயிகளை  சென்ற டைவதில்லை. இந்நிலையில்,நாகை மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை சார்பில்200 பயனாளிகளுக்கு 100சதவீத மானிய விலையில் கோழிக்குஞ்சு வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். கொள்ளிடம் ஊராட்சி  ஒன்றியத்தை சேர்ந்த துணை வட்டார  வளர்ச்சி அலுவலர், கால்நடை மருத்து வர் மற்றும் வட்டார அளவிலான மகளிர் சுய உதவிக்குழுவின் செயலர் அடங்கிய குழுவினர் 200 பயனாளிகளை தேர்வு செய்து அவர்களுக்கு 10ஆயிரம் கோழிக்குஞ்சுகளை கால்நடை பராமரிப்பு துறை வழங்கியுள்ளது.  ஏழை,எளிய மற்றும் ஆத ரவற்ற விதவைகளுக்கு கோழி க்குஞ்சு வழங்குவதற்கு திட்டம் அரசால் அறிவிக்கப்பட்டது.ஆனால், இத்திட்டத்தின் நோக்கத்தை சிதைக்கும் விதமாக வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. ஒரு கோழிக்குஞ்சு ரூ.80-வீதம் 50 கோழி குஞ்சுகள் ரூ.4000ஃ-மதிப்பில் ஒவ்வொரு பயனாளிக்கும் வழங்கப்ப ட்டுள்ளது. மேலும்,கோழிகுஞ்கள் வள ர்ப்பதற்கான கூண்டு செய்வதற்காக ரூ.2500-ஐ பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. ஆக  ஒரு பயனாளிக்கு இலவச கோழிகுஞ்சு வழங்குதல் மூலம் ரூ.6500 வீதம் 200 பயனாளிகளுக்கு ரூ13லட்சம் செல விடப்பட்டுள்ளது. பயனாளிகள் தேர்வு மற்றும் கோழிகுஞ்சுகள் வழங்கப்படும் விபரம் குறித்த விபரம் சிறு குறு விவசாயிகளுக்கோ அல்லது பொதுமக்களுக்கோ தெரியா மல் மற்றும் இத்திட்டம் செயல்படுத்தி யதை மக்களுக்கு தெரியாமல் ரகசிய மாக கால்நடை பராமரிப்பு துறை வழங்கியுள்ளது. உரிய வழிமுறை களை பின்பற்றாமலும்,வேண்டியவர்க ளுக்கு கணிசமான தொகையை பெற்றுக்கொண்டும் கால்நடை துறை சார்பில் இத்திட்டம் செயல்ப டுத்தப்பட்டுள்ளது.  இதுகுறித்து காமராஜ் கூறுகை யில், ஏழை, எளியவர்கள் மற்றும் கணவ னால் கைவிடப்பட்ட விதவை களுக்கு கோழிகுஞ்சுகள் வழங்கி  அவர்களுடைய வாழ்வாதாரத்தை பெருக்க வேண்டிய இத்திட்டத்தின்  பயனை யாருக்கும் தெரியாமல், அவர்களுக்கு வேண்டியவர்களை தேர்வு செய்து ரூ.13 இலட்சத்தை தவறாக பயன்படுத்திய கால்நடை மருத்துவர்கள் மற்றும் பயனாளிகளை தேர்வு செய்த குழுவினர் மீது உரிய விசா ரணை மேற்கொண்டு தக்க நடவ டிக்கையை மாவட்ட ஆட்சியர் மேற்கொள்ள வேண்டும் என்றும் இதுகுறித்து ஆட்சியருக்கு புகார் மனு அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்தார்.

;